துருவம் ஊடக வலையமைப்பு நடாத்தும் ‘நினைவுரசும் இசைமுரசு’ மர்ஹும் நாஹூர் இ.எம்.ஹனிபா அவர்களின் நினைவுச் சொற்பொழிவும், மருதமுனை எஸ்.எம். கமால்தீன் பாடும் இசை முரசின் இதயம் வென்ற இஸ்லாமிய கீதங்களும் நிகழ்வு எதிர்வரும் 26.04.2015 ஞாயிறு மாலை 5 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மர்ஹும் இ.எம்.ஹனீபா அவர்களின் நினைவேந்தல் சொற்பொழிவினை பிரபல வானொலி தொலைக்காட்சி சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, இ,ஒ.கூ.பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம், இ,ஒ.கூ.பிறை எப்.எம். வர்த்தக முகாமையாளர் அறிவிப்பாளர் கவிஞர் எஸ்.றபீக் மற்றும் மணிப்புலவர் மருதூர் ஏ,மஜீத் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
