சம்மாந்துறை சென்னல் ஸாகிறா மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுங்கள்!

ம்மாந்துறை சென்னல் ஸாகிறா மஹா வித்தியால மாணவர்கள் கல்வியில் பின் தங்கிக் காணப்படும் நிலையினைக் கருத்திற் கொண்டு Forum for Development (FODE) எனும் கழகத்தின் ஏற்பாட்டில் 2015 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் எழுதவிருக்கும் மாணவர்களிற்கு 8 மாத கால கணிதப் பாட செயற்திட்டம் ஒன்றினை நடாத்த முடிவு செய்துள்ளது.

இப் பாடசாலையில் சாதாரண தரத்திற்கு தோற்றும் மாணவர்கள் ஏனைய பாடங்களினை விட குறைவாக சித்தியடைவதும்,சித்தியடையும் வீதம் 40-50 இருப்பதனையும் கருத்திற் கொண்டே இவ் அமைப்பினால் இச் செயற்பாட்டினை முன்னெடுக்கப்படுகிறது.

இச் செயற்திட்டம் மூலம் உயர் தரத்திற்கு தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு,விஞ்ஞானத் துறைக்கு தேர்வாகும் மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இச் செயற்திட்டத்தில் பங்கு கொள்ளும் மாணவர்கள் ஒவ்வொருவரும் பயனடையத் தக்கவாறு பல புத்தி ஜீவிகளின் ஆலோசனை உள்வாங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளமை இச் செயற் திட்டத்தின் மேலுமொரு சிறப்பம்சமாகும்.

எனினும்,இச் செயற் திட்டத்தினை மேற்கொள்ள 50151 ரூபாய் அளவில் தேவைப்படுகிறது.முடிந்தவர்கள் இதற்கு தங்கள் உதவிகளினை செய்வதன் மூலம் இச் செயற்திட்டத்தில் பங்கு கொள்ளுமாறு இவ் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.தொடர்புகளுக்கு tel :0767866568,0777866568. mail: acra.acra619@gmail.com.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 
சம்மாந்துறை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -