ஆட்சியைக் கவிழ்ப்போம் -ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

ல்­லாட்சி எனப் புகழ்ந்துகொள்ளும் தேசிய அர­சாங்கம் தற்­போது சர்வா­தி­கா­ரத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்துவிட்­டது. மக்­களின் ஆத­ரவும் பாரா­ளு­மன்ற ஒத்­து­ழைப்பும் இன்றி தனித்து முடி­வெ­டுக்க பிர­தமர் தயாராகி விட்டார் என ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி குற்றம் சுமத்­தி­யுள்­ளது. ஜனநா­ய­கத்­திற்கு முர­ணாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் பிர­த­ம­ருக்கு எதி­ராக எச்­ச­ரித்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.

அதேபோல் சந்­தர்ப்­பத்­திற்­காக காத்துக் கொண்டும் இருக்­கின்றோம்.சரி­யான வாய்ப்பு கிடைத்தால் ஆட்­சியை கவிழ்ப்போம் எனவும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அக் கட்­சியின் பொதுச் செய­லாளர் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது

அர­சியல் அமைப்பின் மாற்றம் கொண்டு வரு­வதில் சரி­யான விதி­மு­றைகள் உள்­ளன. 19 ஆவது திருத்தச் சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் எம்­மி­டையே எவ்­வித முரண்­பா­டு­களும் இல்லை. ஆனால் 19இல் ஜனா­தி­பதி முறை­மை­யினை மட்­டுமே மாற்­றி­ய­மைத்து ஜனா­தி­ப­திக்­கான அதி­கா­ரங்­களை பிர­த­ம­ரிடம் ஒப்­ப­டைக்கும் செயற்­பாட்­டினை ஒரு போதும் நாம் ஏற்றுக் கொள்­ளப்­போ­வ­தில்லை. ஜனா­தி­பதி முறை­மையின் மாற்­றத்­துடன் சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் சுதந்­தி­ரத்­தினை வலி­யு­றுத்­து­வ­துடன் தேர்தல் முறை­மையில் மாற்­றத்­தி­னையும் கொண்­டு­வர வேண்டும். 

அவ்­வாறு இரண்டு விட­யங்­களும் கொண்டு வரப்­பட்ட பின்னர் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­வது சரி­யா­னது. அதை விடுத்து சுய­ந­ல­மான 19 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஒரு போதும் நாம் ஆத­ரவு வழங்கும் எண்ணம் இல்லை.

ஆயினும் இன்று தேசிய அரசின் பாதை மாறிக் கொண்டு வரு­கின்­றது. வாய் திறந்­த­வுடன் நல்­லாட்­சி­யையும் ஜன­நா­ய­கத்­தி­னையும் பேசும் தேசிய அர­சாங்கம் இன்று சர்­வா­தி­கா­ரத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்து விட்­டது. மக்­களின் ஆத­ரவும் விருப்­பமும் இல்­லாது சட்ட மூலங்கள் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு வரப்­ப­டு­வதும் பாரா­ளு­மன்­றத்தின் ஆத­ர­வின்றி செயற்­ப­டு­வதும் சர்­வா­தி­கார ஆட்­சிக்­கான இலட்­சி­னை­களே. 

அதையே இன்று ரணில் தலை­மை­யி­லான தேசிய அர­சாங்கம் செய்து கொண்­டி­ருக்­கின்­றது. இவ்­வி­ட­யங்­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் இடம் கொடுக்­கின்­ற­மையே ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது.

அதேபோல் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் இப்­போது ஒன்றும் எம்மால் குறிப்­பிட முடி­யாது. கிரிக்கெட் போட்­டியில் துடுப்­பாட்ட வீரர் சொல்லிக் கொண்டு துடுப்பெடுத்தாட மாட்டார். பந்து எவ்வாறு வருகின்றதோ அதற்கு அமையவே அடியும் பலமாக அமையும். அதே போலத்தான் பந்து சரியாக வரும்வரை காத்திருக்கின்றோம். சந்தர்ப்பம் கிடைத்ததும் பாராளுமன்றத்தின் ஆட்சியினை கவிழ்ப்போம் எனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -