பாட்டளி சம்பிக்க ரணவக்க இலங்கையின் ஜனாதிபதியாக வருவாரா இல்லையா என்பதை தீர்மானிப்பது பொது மக்கள் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இரு ஜோசியக்காரர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தற்போது சம்பிக்க குறித்து பேசுவதாகவும் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
காமினி வியங்கொட மற்றும் ரஞ்சித் தேவசிறி ஆகிய இருவரே அவர்கள் என்றும் முன்னர் அவர்கள் புலிகளுக்கு சார்பாகவும் கருத்து வௌியிட்டுள்ளதாகவும் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் குறித்து அதிகம் பேசவில்லை என்றும் அவர்களின் கருத்து கவலை அளிப்பதாகவும், முடிந்தால் விவாதத்திற்கு வருமாறு சவால் விடுப்பதாக அவர் கூறினார். 19வது திருத்தச் சட்டம் சூழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.
