அபு அலா –
பாலமுனை அல் ஈமானிய அறபிக் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை (01) இரவு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கும் அறபிக் கல்லூரியின் நிருவாகத்தினருக்குமிடையே இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இடம்பெற்றது.
பாலமுனை மசூறா சபையின் இணைப்பாளரும், முன்னாள் மத்திய குழுவின் செயலாளர் எம்.ஏ.சதாத் தலைமையின் கீழ் அல் ஈமானிய அறபிக் கல்லூரியின் அதிபர் அல் ஹாபீழ் மௌலவி ரீ.நிஸ்தார், நிருவாகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஹமீட், செயலாளரும் ஓய்வு பெற்ற தபால் அதிபருமான ஏ.ஆதம்பாவா, பொருளாளர் எம்.எம்.உதுமாலெப்பை மற்றும் உறுப்பினர்களான முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாலமுனை அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா, ஊடகவியலாளர் ஐ.ஏ.சிறாஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2011 ஆம் ஆண்டு மிகக் குறுகிய வளப்பற்றாக்குறையுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி இன்று 68 மாணவர்கள் குர்ஆனை மனனம் செய்பவர்களாகவும், மார்க்கக் கல்வியை கற்கின்றவர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இன்னும் பல தேவைப்பாடுகள் உள்ளன எனவும் இதில் 90 வீதமான மாணவர்கள் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர் என்று பாலமுனை மசூறா சபையின் இணைப்பாளரும், முன்னாள் மத்திய குழுவின் செயலாளர் எம்.ஏ.சதாத் கிழக்கு மாகாண சபை உறுப்பினரிடம் எடுத்துரைத்தார்.
அல் ஈமானிய அறபிக் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கும், அங்கு மார்க்க கல்வியை கற்கின்ற மாணவர்களுக்கும் என்னாலான உதவிகளை நான் செய்வேன் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கூறினார்.
.jpg)
.jpg)
.jpg)