புறக்கோட்டை சந்தைகளில் கருவாடு கொள்வனவு செய்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வத்தளை பகுதியில் நேற்று கைப்பற்றப்பட்ட மனித நுகர்வுக்குத் தகுதியற்ற ஒரு தொகை கருவாடுகளில், 45 பெட்டிகள் புறக்கோட்டை சந்தைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சுக் தெரிவித்துள்ளார்.
இவற்றில் 1000 கிலோகிராம் கருவாடு இருந்துள்ளதோடு இது குறித்து நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுகர்வுக்குத் தகுதியற்ற கருவாட்டு கொள்கலன்கள் இரண்டு நுகர்வோர் அதிகாரசபையினால் வத்தளை பிரதேசத்தில் வைத்து நேற்று மீட்கப்பட்டுள்ளன.
