எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கான பொது கூட்டமும் விருந்து உபசார நிகழ்வும் கல்லூரியின் பதிவாளரும், தொழில் சங்கத்தின் தலைவருமான அல்-ஹாஜ் எஸ்.எம்.பஸீர் தலைமையில் கல்விக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி அல்-ஹாஜ் எம்.ஜ.எம். நவாஸ் கலந்து கொண்டு உரையாற்றுகையில், எமது கல்லூரிக்கு கல்வி கற்க வந்த பயிலுனர் ஆசிரியர்கள் கல்வியை ஏனைய இடங்களுக்கு சென்று ஒழுக்கமான முறையில் கற்றுக் கொடுப்பதற்கு எமது கல்விசாரா ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என்றும் எமது சங்கத்தினை ஒற்றுமை படுத்தி ஒரு பெரிய சங்கமாகவும் இந்த சங்கத்தினால் பலர் பல நன்மைகளை அடைய வேண்டும் எனவும் கூறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அனைத்து கல்விசாரா உத்தியோகத்தகளும் கலந்து கொண்டு விருந்து உபசார நிகழ்வில் பங்கு பற்றினர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)