அபு அலா -
பொத்துவில் – பசறிச்சேனையில் 70 இலட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஜூம்ஆப் பள்ளிவாயல் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.
பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சூதீன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித், உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜூதின், மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல உலமாக்கள், பொதுமக்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பசறிச்சேனை மக்களின் மிக நீண்டநாள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் பசறிச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.முபாறக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் அமைச்சர் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே இன்று இந்த பள்ளிவாயல் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(ந-த்)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)