மகளின் பாதுகாப்பிற்காக 43 ஆண்டுகளாக ஆண் வேடத்தில் வாழ்ந்த எகிப்து தாய்!

லகில் வாழும் எத்தனையோ பெண்கள், தங்களது குடும்பத்தை காப்பாற்ற எத்தனையோ தியாகங்களை செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக இதுவரை யாரும் செய்யாத ஒரு விஷயத்தை எகிப்து தாய் ஒருவர் செய்துள்ளார்.

எகிப்தைச் சேர்ந்த சிசா அபு தாவோக் (64) திருமணமாகி கர்ப்பிணியாக இருந்த போதே கணவரை இழந்துவிட்டார். பிறகு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர்களது குடும்ப வழக்கப்படி, பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது. கணவரையும் இழந்து பெண் குழந்தையோடு கஷ்டப்பட்ட சிசா, தனது குழந்தை கௌரவமாகவும், அதோடும் பாதுகாப்பாகவும் வளர்க்க எண்ணி ஒரு புதுமையான யோசனையை பின்பற்றினார்.

அதாவது, அவரைப் பற்றி அறியாத ஒரு கிராமத்துக்குச் சென்ற சிசா, அங்கு ஆண் வேடம் இட்டு, ஆண்களுக்கான ஆடையை மிகவும் தொலதொலவென்று தைத்து அணிந்து கொண்டு கட்டடப் பணிகளுக்குச் சென்றார்.

சாலையோரம் செருப்புக்கு பாலீஷ் போட்டு தற்போது தனது பெண்ணை வளர்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

சுமார் 43 ஆண்டுகளாக ஆண் வேடம் இட்டு ஆண்கள் செய்யும் பணிகளை செய்த இந்த தாயை, இலட்சியத் தாய் என்று விருது வழங்கி கௌரவித்துள்ளது அந்நாட்டு சமூக சேவை நிறுவனம் ஒன்று.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -