பி.முஹாஜிரீன் -
பொத்துவில் றஹ்மத் நகரில் அமைந்துள்ள அல்கலீஜ் பெண்கள் அரபுக்கல்லூரிக்கு இவ்வாண்டுக்கான (2015) புதிய மாணவிகள் சேர்த்து கொள்ளப்படவுள்ளனர் .
(விண்ணப்பங்கள் 30.04.2015 வரை ஏற்றுக்கொள்ளப்படும்)
1. கற்கை நெறியின் காலம் :
ஐந்து ஆண்டுகளை மட்டும் கொண்ட இஸ்லாமிய கற்கை நெறிகளோடு க.பொ.த (உ/த) பாட நெறிகளும் கற்பிக்கப்படும்.
2. தகைமைகள் :
· அல் குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருத்தல்
· க.பொ.த ( சா/த) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
· சிறந்த உடல் ஆரோக்கியம் உள்ளவராக இருத்தல்.
· நல்லொழுக்கமுள்ளவராக இருத்தல்.
3. கட்டண விபரம்:
· கல்லூரி கட்டணமாக மாதாந்தம் ரூபா 3500/= அறவிடப்படும்.
4.நேர்முகப் பரீட்சை:
·இதற்கான நேர்முகப் பரீட்சையில் அல்குர்ஆன் ஒதுதல் மற்றும் மாணவிகளின் ஆவணங்கள் என்பன பரீட்சிக்கப்படும்.
5.பரீட்சிக்கப்படும் ஆவணங்கள்:
பிறப்பத்தாட்சிப் பத்திரம்
க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறு
தேசிய அடையாள அட்டை
கல்விச் சான்றிதழ்கள்.
6.நேர்முகப்பரீட்சை காலம்:
· திகதி : 2015.05.05
· நேரம் : காலை 08.00 மணி முதல் – 12.00 மணி வரை
· இடம் : அல் கலீஜ் மகளிர் அரபுக் கல்லூரி , மண்டபம், பொத்துவில்.
குறித்த தகமை உடையவர்கள் விண்ணப்ப படிவம் தயாரித்து கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். நேர்முகப்பரீசையின் போது ஆவணங்களின் நிழல் பிரதிகளை ஒப்படைதல்வேண்டும்.
தொடர்புகளுக்கு :
அதிபர்,
அல் கலீஜ் பெண்கள் அரபுக் கல்லூரி,
ரஹ்மத் நகர்,
பொத்துவில்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி; 0779362584, 0767362584
0672255164, 0777541357
