எஸ்.அஷ்ரப்கான்-
1979 – 1983 வரையான காலப்பகுதியில் கல்முனை நகரில் ஆசனப்பதிவு நிலையமொன்று இயங்கி வந்துள்ளதுள்ளமையினால் ஆசனப் பதிவு நிலையத்தினை மீண்டும் கல்முனை நகரில் திறப்பதற்கு விஷேட கவனத்தை செலுத்தி மிக விரையில் அவ்வாசன பதிவு நிலையம் திறக்கப்பட உள்ளதையிட்டு சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணிமன்றம் சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
இந்த விடயத்திற்காக பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டவர் என்ற வகையில் இவ்வமைப்பின் ஸ்தாபகத் தலைவர் எம்.ஐ.எம்.அன்சார் இது விடயமாக மேலும் குறிப்பிடும்போது,
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக ஸ்தம்பிதமடைந்த புகையிரத ஆசனப் பதிவு நிலையத்தினை மீண்டும் கல்முனை நகரில் திறப்பதற்கு விஷேட கவனத்தை செலுத்தும்படி ஆலோசனையொன்றை முன்வைத்து சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணிமன்றத்தினால்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும், மொபிடல் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளருக்கும், புகையிர முகாமையாளருக்கும், வர்த்தக அத்தியட்சகருக்கும் மஹஜர்களை அனுப்பி வைத்திருந்தோம்.
இதன் விளைவாக அன்மையில் மொபிடல் நிறுவன உயர் அதிகாரிகள் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து புகையிரத நிலைய அதிபரிடம் விரைவில் கல்முனை நகரில் குறித்த ஆசனப்பதிவு நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அரச ஊழியர்களின் புகையிரத ஆணைச் சீட்டுக்குரிய ஆசனப்பதிவுகள் சம்மந்தமான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இது விடயமாக எமது அமைப்பு மிக நீண்டகாலமாக இருந்து வந்த பாரிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க இருப்பதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
அம்பாரை மாவட்டத்தில் வாழும் அதிகமான மக்கள் நாள்தோறும் மட்டக்களப்பிலிருந்து பல்வேறு இடங்களுக்கு புகையிரதத்தில் பயணங்களை மேற்கொள்கின்றனர். தற்போது புகையிரத ஆசனப்பதிவுகள் மொபிடல் ஊடாக நாடு பூராகவும் நவீன தொழிநுட்ப முறையில் கணணி மூலம் (ழுடெiநெ ளலளவநஅ) செய்யப்படுகின்றன. பிரயாணம் செய்யும் திகதியிலிருந்து 44 நாட்களுக்கு முன்னர், பிரயாணம் சென்று வருவதற்கான ஆசனப் பதிவுகளை ஒரே தடவையில் ஒரே நிலையத்திலேயே செய்து கொள்ளமுடியுமாக இருப்பதுடன், ஆசனப்பதிவுகளை இரத்துச் செய்யவோ அல்லது பிரயாணத் திகதியில் மாற்றீடு செய்யவோ வேண்டுமாயின் உரிய புகையிரதம் புறப்படும் நேரத்திலிருந்து 6 மணித்தியாலத்திற்கு முன்னர் சென்று அச்சேவையினை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளமை ஒரு சிறப்பான விடயமாகும்.
அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது. அம்பாரை, நற்பிட்டிமுனை, மத்திய முகாம், பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பிரதேசங்களும் அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள களுவாஞ்சிக்குடி, கல்லாறு, நீலாவணை போன்ற பிரதேசங்களும் கல்முனை நகரினை அண்மித்த பிரதேசங்களாகும். மேற்படி பிரதேச மக்கள் புகையிரத ஆசனப்பதிவுகளை செய்து கொள்வதற்காக மிகவும் சிரமத்திற்கு மத்தியில் சுமார் 30,40,50,60 கிலோமீற்றர் தூரம் பயணித்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு சென்றும் கூட ஆசனங்களை பதிவு செய்ய முடியாமல் வெறுங்கையுடன் திரும்பி வரும் நிலைமையும் ஏற்படுவதுண்டு என்பதையும் சுட்டிக் காட்டுகின்றோம்.என்றார்.
இதுவிடயமாக கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைமை விஷேடமாக யுத்தம் காரணமாக புகையிரத சேவை தடைப்பட்டதினால் புகையிரத ஆசனப்பதிவு நிலையமும் மூடப்பட்டதாகவும் மீண்டும் திறப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதை வரவேற்கின்றோம் என பிரதேசவாசிகள் சம்மந்தப்பட்டோருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
.jpg)