ஜனாதிபதி செயலக வாகன மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள எம்.ஐ.அகமது கபீர் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதின் பிரத்தியேக ஆளணியிலேயே பணி புரிந்தார்.
இது தொடர்பாக இணையத்தளத்தில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளித்துள்ள முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் கைது செய்யப்பட்டுள்ள கபீர் தனது பிரத்தியேகச் செயலாளராகப் பணிபுரிய வில்லை. என மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இது தர்க்கவியல் ரீதியில் சரி. எனினும் கபீர் முன்னாள் முதலமைச்சரின் பிரத்தியேக ஆளணியில் பொறுப்பு வாய்ந்த பதவியொன்றை வகித்து வந்தார். இது திருகோணமலை மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி கிழக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
எனவே, அவர் பிரத்தியேக செயலாளராகப் பணி புரியாவிட்டாலும் பொறுப்புவாய்ந்த பதவியொன்றை வகித்து வந்தார் என்பதே உண்மையான விடயமாகும்.
