ஊழியர் சேமலாப நிதிக் கொடுப்பனவுகளை துரிதமாக வழங்க கோரி ஜனாதிபதிக்கு மகஜர்...!

நிஸ்மி- 

முர்த்தி அதிகார சபையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றி திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்திற்குள் உள்வாங்கப்பட்டு முதல் நியமனத்தினத்திலிருந்து ஓய்வூதியத் திட்டத்திற்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ள தற்போது திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றிய காலத்திற்கான ஊழியர் சேமலாப நிதிக் கொடுப்பனவுகளை துரிதமாக வழங்க ஆவன செய்யுமாறு கோரும் மகஜர் ஒன்றினை அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

இம் மகஜரின் பிரதிகள் பிரதமர், சமுர்த்தி அமைச்சர், சமுர்த்தி அமைச்சின் செயலாளர் ஆகியோர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இவ் விடயம் சம்பந்தமாக மாண்புமிகு ஜனாதிபதி, பிரதமர், சமுர்த்தி அமைச்சர், சமுர்த்தி அமைச்சின் செயலாளர், திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஊழியர் சேமலாப நிதியத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர்களுடனான கலந்துரையாடலின்போது சமுர்த்தி அதிகார சபையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றி திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்திற்குள் உள்வாங்கப்பட்டு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற தினத்திலிருந்து ஓய்வூதியத் திட்டத்திற்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ள தற்போது திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தாங்கள்; சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றிய காலத்திற்கான ஊழியர் சேமலாப நிதிக் கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்த போதிலும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

எனவே இக் கொடுப்பனவினை விரைவாக வழங்க நடவடிக்கை மேற் கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் இதற்கு அழுத்தம் கொடுக்கும வகையில் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த சங்கம் தீர்மானித்துள்ளதாக சங்க உப தலைவரும், அம்பாரை மாவட்ட தலைவருமான ஐ.எச்.அப்துல் வஹாப் தெரிவித்தார்.

அத்தோடு அலுவலகவாடகை, தளபாட வசதி, காகிதாதிகள், போக்கு வரத்துக் கொடுப்பனவு, மற்றும் பதில் கடமைக் கொடுப்பனவு என்பவற்றையும் வழங்க ஆவனசெய்யுமாறும் வஹாப் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -