கண்டியில் இடம் பெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூலம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு இது குறித்து பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்தன.
இந்தநிலையில் சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை மீறி சில உறுப்பினர்கள் அதில் கலந்துகொண்டுள்ளதாக ராஜித்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.