கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் தெரிவிக்காதவர்கள் அது பற்றி தங்களது பிரிவுக்குரிய பொலிஸ் நிலையங்களில் முறையிட்டு அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் கிளைக் காரியாலத்தில் தெரியப் படுத்துமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் காணாமல் போனோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்களை தாம் பெற்றுவருவதாகவும் இவர்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
யுத்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் பலர் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். இவர்கள் தொடர்பான முறையான எந்த நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அறிய முடிகின்றது.
அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் கிளைக் காரியாலயம் தமது பணிகளை முன்னெடுத்துவருகின்றது.
எனவே எவ்வித பயமும், தயக்கமுமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தங்களது பிரச்சினைகளை முறையிட்டு, எமது காரியாலயத்துக்கும் தெரியப்படுத்தவும் எனவும் அவர் மேலும் கூறினார்.
.jpg)
.jpg)