அஜித் படத்தில் இசையமைப்பதை உறுதிபடுத்திய அனிருத்!

ஜித் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் என்னை அறிந்தால்.

அடுத்து இவர் வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் நகரப்புறத்தில் இருப்பது போலவும் மற்றொருவர் கிராமத்தில் இருப்பது போலவும் திரைக்கதை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று இப்படத்தின் பூஜை விருகம்பாக்கம் சாய்பாபா கோவிலில் நடைபெற உள்ளது. இப்படத்தை ஏ.எம் ரத்னம் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் முதல் முறையாக அஜித்துடன் அனிருத் இணைகிறார் என கடந்த சில வாரங்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. தற்போது இசையமைப்பாளர் அனிருத்தே அந்த செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில் 'அஜித் சார் நடிப்பில் ரத்தினம் சார் தயாரிப்பில் சிவா சார் இயக்கத்தில் உருவாக உள்ள தல 56வது படத்தில் இசையமைக்கப் போவது மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகவும் பெருமையாகவும் உள்ளது. மீண்டும் ஒரு நல்ல வருடத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி' என்று அனிருத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -