மகிந்தையின் மைத்துனர் செய்த பண மோசடி அம்பலமாகியது!

லங்கையின் பெயரை உயர்த்துவதாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் செய்த பண மோசடி அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவில் இலங்கையின் பெயரை சிறப்பாக பேணிக்காப்பாற்ற இரண்டு விளம்பர கம்பனிகளான பெட்டன் பொக்ஸ் (Patton Boggs) மற்றும் கிரன்போர்ட் ஜோன்சன் ரொபின்சன் (Cranford Johnson Robinson) ஆகியவற்றின் ஆலோசனைக்காக 840, 000 அமெரிக்க டொலர் (ரூபா. 95, 592 242) வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வளவு பெரிய தொகையை ஜனாதிபதியின் மைத்துனரும் அமெரிக்காவின் உயர் ஸ்தானிகருமான சாலிய விக்ரமசிங்கவினால் செலவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்திருப்பது வெளிவிவகார அமைச்சுக்கே தெரியாமல் இருக்கின்றது என்பது ஆச்சரியப்பட வேண்டியது என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -