புறக்கணிக்கப்படும் பொத்துவில் 6ம் வட்டாரம்!

இர்ஸாத் ஜமால்தீன்-

புறக்கணிக்கப்படும் பொத்துவில் 6ம் வட்டாரம் சுமார் 24000யிரம் வாக்குகளை கொண்டிருக்கும் பொத்துவில் பிரதேசமானது இன்று அரசியல் அதிகாரமற்ற அனாதையாக இருக்கின்றது. அதற்கு அயல் பிரதேச அரசியல் வாதிகள் போடும் பிச்சைக்கு சோரம் போகும் சில்லரை தரகர்கள்தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

தரகர்களின் பசப்பு வார்த்;தைகளுக்கும், ஏமாற்று வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து போன எம் சமூகம்; அளித்த வாக்கினால் அரசியல் அதிகாரத்தினை பெற்றவர்கள் இப்பிரதேசத்தையும், மக்களையும் மறந்து இருப்பது யாருடைய மடைமை. 

மத்திய, மாகாண அரசில் அங்கம் வகிப்பவர்களின் அபிவிருத்தித் திட்டங்களில் பொத்துவில் பிரதேசம் புறக்கணிக்கப்கடுவதைப் போன்று பொத்துவில் கிராம நிலதாரி பிரிவு 06 ஆனது உள்ள10ர் அரசியல் வாதிகளால் மிக நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.

பிரதேச சபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டத்திலே மேற்குறிப்பிட்ட புறக்கணிப்பு தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.ஜ.தே.கட்சியின் கோட்டை என்ற குற்றச்சாட்டில்; புறக்கணிப்புச்செய்யப்பட்டு வந்த இப்பிரிவானது முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் அவர்களின் கட்சி மாற்றத்துடன் இப்பிரிவின் அனைத்து வாக்குகளும் பிரதே சபையை ஆளும் கட்சிக்கே அளிக்கப்படுகின்றது. இதனை பிரதேச அரசியல் வாதிகள் நன்கறிவர்.

சபையை கட்சி கைப்பற்ற வேண்டும் என்று வாக்களித்த இப்பிரிவு இன்னும் புறக்கணிப்புச் செய்யப்படுவதானது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரதேச சபையின் ஆட்சியில் பெரும்பாலான வீதிகள் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு, கொங்ரீட் வீதிகளாக காட்சி தரும் இவ்வேலையில், 06ம் வட்டார வீதிகள் மாத்திரம் மிக மோசமான முறையில் காட்சி தருவதை யாரும் கண்டு கொள்ள வில்லையா ?.

குறிப்பாக ராவுத்தர் வீதி, மூசா ஜேபி(மைய வாடிக்கு இவ்வீதியாலே ஜனாஸக்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன) வீதிகளானது பாதசாரிகள் நடந்து செல்ல முடியாதவாறு கடந்த வெள்ளத்தினாலும், தற்போது பெய்த மழையாலும் சேதமடைந்து காணப்படுகின்றடுது.

இப்பிரிவு வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்படுவதற்கு பிரதேச சபையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லையா?. அபிவிருத்தித்திட்;டங்களை முன்னெடுப்பதற்கு இப்பிரிவிற்கு பொறுப்பாக இருக்கும் சபை உறுப்பினர் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லையா?.

தற்போதய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேசத்தின் வீதி அபிவிருத்திக்கான பட்டியல் கோரப்பட்ட போது மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் மூசா ஜேபி வீதி உள்ளடக்கப்படாமல் புறக்கணிப்புச்செய்யப்பட்டதன் பின்புளம் என்ன?.

தவிசாளர் எம்.எஸ் அப்துல் வாஸித் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரதேச சபையின் ஆட்சிக்காலத்தில் குறித்த கிராம சேவகர் பிரிவில் 1 சதவீத அபிவிருத்தி வேலைiயாவது நடைபெறாமல் இருப்பது மிகவும் கவலை அளிப்பதாக இக்கிராம சேவகர் பிரிவு மக்கள் மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பொத்துவில் பிரதேசத்திற்கு அரசியல் அதிகாரத்தினை பெற்றுக்கொள்வதற்கு முஸ்தீபுகளை மேற்கொள்வதைப் போன்று எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் இப்பிரிவில் இருந்து ஒரு உறுப்பினரை சபைக்கு அனுப்புவதற்கு மக்கள் முன்வர வேண்டும். எனவும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.

(ழூசா துP வீதியின் அவலத்தினை தெளிவு படுத்தும் காணொளி இணைக்கப்பட்டுள்ளது,  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -