யஹலதன்ன, பெலுன்கல கிராமங்களுக்கு 40 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கும் நிகழ்வு!

இக்பால் அலி-
னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 வேலைத்திட்டத்திற்கு அமைவாக நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்,கண்டி மாவட்டத்தில் யஹலதன்ன, பெலுன்கல ஆகிய கிராமங்களுக்கு 640 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கான முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தார். 

முதலில், யஹலதன்ன கிராமத்திற்கு 320 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான முதற்கட்ட வேலைகளை அமைச்சர் ஆரம்பித்து வைத்தார். 

இதன் மூலம் கருவலவத்த நீர் விநியோக குழாய் கட்டமைப்பினூடாக நாள்தோறும் 35000 லீற்றர் நீர் யஹலதன்னைக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இப்பிரதேசத்தை உள்ளடக்கியதாக அமைக்கப்படவுள்ள உத்தேச பாரிய நீர் வழங்கல் திட்டம் செயல்படுத்தப்படும் வரை, இச்செயல் திட்டத்தினால் யஹலத்தன்ன கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 350 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. இப்பகுதி வாழ் மக்களின் நீண்டகால நீர்த் தேவை இத்திட்டத்தினால் நிறைவு செய்யப்படும்.

யஹலதன்ன கிராமம், முருத்தலாவ, தெஹியங்க ஆகிய ஊர்களுக்கு அண்மையில் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள கண்டி மாவட்டத்தின் தொன்மையான கிராமங்களில் ஒன்றாகும்.

அடுத்து, அமைச்சர் ஹக்கீம் பெலுன்கல கிராமத்திற்கு 320 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தார். 

இதன் மூலம் லகமுவ நீர் விநியோக குழாய் கட்டமைப்பினூடாக நாள்தோறும் 20,000 லீற்றர் நீர் விநியோக்கிப்படவுள்ளது. இச்செயல் திட்டத்தினால் பெலுன்கல மற்றும் லகமுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 200 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

இப்பிரதேசங்களில் வசித்து வரும் மக்களின் நீண்டகால நீர் பற்றாக்குறை இத்திட்டத்தினால் நிவர்த்தி செய்யப்படும்.
 
எழில் மிகு மலைக்குன்று ஒன்றை அடுத்துள்ள பெலுன்கல, கடுகண்ணாவை, கம்பளை வீதியின் மருங்கில் அமைந்துள்ள ஒரு குக்கிராமமாகும்.

இவ்விரு நீர் வழங்கல் திட்டங்களினாலும் மொத்தமாக 550ற்கு மேற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

இந்நிகழ்வுகளில் மத்திய மாகாண சபை உறுப்பினர் மயந்த திசாநாயக்க, காணி மீட்டல் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான், கண்டி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதி பொது முகாமையாளர் எல்.எல்.ஏ.பீரீஸ், கண்டி மாநகர சபை உறுப்பினர் அஸ்மின் மரிக்கார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட அமைப்பாளர் முசம்மர் கடாபி, உடுநுவர பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.ஹலீம், யூ.பீ.விஜயகோன், யட்டிநுவர பிரதேச சபை எதிர் கட்சித் தலைவர் சம்பிக்க, யட்டிநுவர பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் புஷ்பா கொடித்துவக்கு, விவாகப்பதிவாளர் அன்வர் ஷரீப், தும்பனை பிரதேச சபை உறுப்பினர் அம்ஜாத் முத்தலிப், பன்வில பிரதேச சபை உறுப்பினர் இத்ரீஸ், யஹலத்தன்ன பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.எம்.ராசீக், தெங்கு செய்கைச் சபை தலைவர் ஹிதாயத் சத்தார், முன்னாள் யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.மஃபூப் ஆகியோர் உட்பட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -