திருகோணமலை நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை இன்று (24.03.2015) கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந் நிகழ்விற்கு பாடசாலையின் அதிபர் பெ.அய்யமுத்து தலைமை தாங்கினார்.இதன்போது கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் அ. வித்யாநந்த மூர்த்தி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.அதிதிகள் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும் தொழிலுநுட்ப ஆய்வு கூட கட்டிடத்தை நாடாவை வெட்டி திறந்து வைப்பதையும் பெயர் பலகையை திரை நீக்கம் செய்வதையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)