எம்.ஏ. தாஜகான்-
அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கற்பிணித் தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் போசனை உணவு வழங்கும் நிகழ்வு இன்று (24) பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.சமீம் தலைமையில் இடம்பெற்றது.
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட கற்பிணித்தாய்மார், பாலூட்டும் தாய்மார்கள் உட்பட 50 பேருக்கு போசனை உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இப்போசனைப் பொதியில் கௌப்பி,பருப்பு,கடலை,சோயா,செமன்டின்,சிவப்பு அரிசி,நெத்தலி, கொண்ட போசனைப் பொருட்கள் அடங்கலாக பொதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.
இப் போசனைப் பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன், கல்முனைப்பிராந்திய தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.பசால், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத்,பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.இஸ்ஸதீன், பொத்துவில் பொலிஸ் ஜபீ காமினி, சுகாதாரப்பரிசோதகர்கள், சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)