முசலிப்பிரதேசத்திற்காக தனியான பஸ் டிப்போ அமைக்கப்பட வேண்டும்!

முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்-

முசலிப்பிரதேச மக்கள் அனுராதபுரம் மன்னார் வீதியில் பயணம் செய்கின்றபோது,முருங்கனில் இறங்கினால் பயணத்தைத்தொடர பல மணித்தியாலங்கள் காத்துக்கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.காலையிலும்,மாலையிலும் ஓரளவு பஸ் போக்குவரத்து உள்ளது.ஆனால் இடைப்பட்ட வேளையில் பயணிப்போர் 500.00-1000.00 வரை செலுத்தவேண்டியுள்ளது.

இது இப்பிரதேச மக்களைப் பொறுத்தவரை பாரிய ஒரு சிக்கலாகும்.இதேபோன்று புத்தளம் மன்னார் வீதியில் செல்வோரும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.குறைவான பஸ் சேவையால் சனநெரிசல் அதிகம் காணப்படுகிறது.

அதிக சனத்தை ஏற்றுவதனால் இருக்கையில் இருப்போரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.ஆனால் இருக்கையில் இருப்போரிடமும்,தொங்கியவண்ணம் பயணிப்போரிடமும் ஒரே பணத்தொகையே அறவிடப்படுகிறது.

தனியார் பஸ்களில் அதிக பணம் அறவிடப்படுகிறது.ஆனால் பயணச்சீட்டு வழங்கப்படுவதில்லை. புயணிகளின் நலனைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
மேற்சொன்னவற்றிற்கெல்லாம் தீர்வாக முசலி பஸ்டிப்போ அமைக்கப்பட வேண்டும்.இதற்குரிய காணி நிலமும் சிலாவத்துறை முருங்கன் வீதியிலுள்ள பேய்ப்பள்ளம் எனுமிடத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த டிப்போவைச் சிறப்பாக நடத்த அத்தியட்சகர்(டி.எஸ்)தரத்திலுள்ள எஸ்.எம்.ஐயூப்கானும் உள்ளார்.இவர் மன்னார் டிப்போ,கதுருவெல டிப்போ,6ம் கட்டை உப டிப்போ,புத்தளம் டிப்போ போன்றவற்றில் சிறப்பாக சேவை செய்துள்ளார்.

ஆகவே,இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு விரைவில் முசலிக்கென தனியான பஸ் டிப்போவை 100 நாள் திட்டத்திற்குள் அமைத்துத்தருமாறு , பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவா பாரூக்கிடமும்,போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கிடமும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -