கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை எனக்கு தாருங்கள்.

முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் முதலமைச்சர் வழங்கப்பட வேண்டு என்ற காலம் போய் இன்று ஊர் உருக்கு முதலமைச்சர் வேண்டி பிரதேசவாதத்தை காட்டி நிற்கின்றது.

இக்கால கட்டத்தில் நீங்கள் வழங்கிய காலக்கெடு முடிந்து
தற்போது 48 மணிநேரம் ஆகின்றது இது வரை நீங்கள் அந்த பதவியை யாருக்கும்
கொடுக்காமல் இழுத்தடிப்பதனால் கட்சி போராளிகள் ஒருத்தரை ஒருத்தர் குற்றம்
சொல்லி கட்சிக்குள் பிளவு ஏற்படாமல் இருக்கும் என்று நாம் 100% நம்பிக்கை
கொள்ள முடியாது.

ஆனால் இது நடுநிலையாளர்களின் பார்வையில் முதலமைச்சர் பதவி கிழக்கில்
கொடுபடுவதினால் ஆண்டான்டு காலம் நீங்கள் கட்டிக்காத்த தலைமைத்துவம்
பறித்தெடுக்கப்பட்டுவிடுமோ என்ற ஐயம் உங்களிடம் இருப்பதனால் தான் இந்த
பதவியை ஒரு உறங்கு நிலை உறுப்பினருக்கு கொடுக்க திட்டமிட்டு அதை
செயற்படுத்து முகமாக‌ மக்கள் முன் வழங்கப்பட்ட வாக்குறுதி காலம்
நிறைவடைந்தும் இன்னும் உறங்கு நிலை உறுப்பினரை கண்டு கொள்வதில் அச்சம்
அடைந்த தலைவராக காத்திருப்பதாக தெரிவிக்கின்றார்கள். நிச்சயாமக இதை எல்லா
போராளிகளும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.

ஆக கட்சியின் தெரிவுக்கு முன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாற்ற நினைத்து
மைத்திரி அரசினை தெரிவு செய்து இருக்கும் இவ்வேளையில் முஸ்லிம்களின்
வாக்குகள் அனைத்தும் கிடைக்க நாங்கள் தான் என்று கரணம் கூறி அரசிடம்
இருக்கும் நாங்கள் மைத்திரியின் நூறு நாள் திட்டதின் விசேட வர்த்தமானி
அறிவித்தல் மூலம் என்னை மாகண சபை உறுப்பினராக தெரிவு செய்து முதலமைச்சர்
பதவியினை தந்துதவுன் மூலம் பொத்துவில் வாழ் வாக்களர்களை வெறும்
வாக்களிக்கும் இயந்திரங்களாக முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்தவில்லை என்று
கூறும் அளவுக்கு கட்சியின் நிலை உயர செல்லும் அத்தோடு இந்த வேண்டுகோளை
மக்களின் ஒருவனாகவும் கட்சியின் தலைமைத்துவத்துக்கு எந்தவிதத்திலும்
பாதிப்பை ஏற்படுத்தாமலும் நல்ல உறங்கு நிலையில் இருப்பேன் என்ற
நம்பிக்கையில் உங்களிடமும் கட்சி விசுவாசுகளிடமும் கேட்டு கொள்கின்றேன்.

மக்சூத் முஹம்மட்  றம்ஸான்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -