கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பேருவளை நகர பிதா மில்பர் கபூர், முன்னாள் நகர பிதா மர்ஜான் அஸ்மி மற்றும் குடும்பத்தினர் தனக்காக பாடுபட்டதை மஹிந்த நினைவுகூர்ந்துள்ளார். எதிர்காலத்திலும் பஸீல் ஹாஜியார் குடுத்பத்தினதும் பேருவளை மக்களினதும் பங்களிப்பு தனக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .
இதன்போது வக்பு சபை முன்னாள் தலைவர் அஹ்கம் உவைஸின் இல்லத்திற்கு சென்ற மஹிந்த அங்கு பகலுணவை உட்கொண்டுள்ளார் . அஸ்ஸெய்யித் அப்துல் காதர் மசூர் மெளலானா உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் இச்சந்திப்பில் பங்குபற்றியுள்ளனர்
மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக , பொது பல சேனா போன்ற இன,மதவாத தீவிரவாத அமைப்புகள் பெரியளவில் செயல்பட்டமையும் , அவற்றுக்கு எதிராக சட்டத்தை மஹிந்த அரசாங்கம் செயல்படுத்த மறுத்து வந்தமையும் , குறிப்பிடத்தக்கது , அதேவேளை பொது பல சேனா போன்ற அமைப்புக்களின் இன ,மதவாத பிரசாரம் ,மற்றும் நடவடிக்கைகளினால் அலுத்கம, பேருவளை எரியூட்டப்பட்டமையும் அதற்கு பின்னரும் கூட் மஹிந்த அரசாங்கம் பெளத்த தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த மறுத்து வந்தமையும் இங்கு சுடிகாட்டத்தக்கது.LM
