வாக்களிப்பதில் தமிழர் என்றோ முஸ்லிம் என்றோ வித்தியாசம் கிடையாது- பிரதி அமைச்சர் அமீர் அலி!





வாக்களிப்பதில் தமிழர் என்றோ முஸ்லிம் என்றோ வித்தியாசம் கிடையாது. கடந்த காலத்தில் கல்குடாத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர் தேவநாயகம் ஐயா அவர்களது வெற்றியை ஓட்டமாவடி வாக்காளர்களே அதிகம் உறுதிப்படுத்திய வரலாறுள்ளது என சமூர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சந்திவெளி பிரதேச மக்களால் சமூர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு நிகழ்த்தப்பட்ட வரவேற்பு நிகழ்வு சாமித்தம்பி ராஜேந்திரன் தலைiமையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்!

தமிழர் என்றோ முஸ்லிம் என்றோ வித்தியாசம் பார்த்து வாக்களிப்பதை விட தமது பிரதேச அபிவிருத்திக்காகப் பிரதேசத்தின் தேவைகளை அறிந்து எவர் செயற்படுவார் என்று நம்பிக்கை வைக்கின்றோமோ அவ்வாறானவர்களை இனங்கண்டு வாக்களித்து எமது பிரதேசத்தை அபிவிருத்தியடைந்த பிரதேசமாக மாற்றுபவர்களாக நாம் மாற வேண்டும்.

இனவாதம் பேசி அரசியல் செய்த காலம் தற்போதில்லை. மக்கள் எல்லோரும் அரசியலில் தற்போது மிகத்தெளிவாக உள்ளார்கள். எவர் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வார், எவர் தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டு போனால் அடுத்த தேர்தலுக்கு வருவார்கள் என்று மக்களுக்கு நன்கு தெரியும். முஸ்லீம் கிராமங்களைப் போல் தமிழ் கிராமங்களும் அபிவிருத்தி கண்ட கிராமங்களாகத் திகழ வேண்டும்.

இதற்காகத்தான் ஈரான் நாட்டின் நிதியுதவியுடன் கிண்ணையடி கிராமத்திற்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்தேன். இவ்வாறு எதிர்காலத்திலும் தமிழ் கிராமங்களின் அபிவிருத்திக்காக பல முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ரீ.உதயஜீவதாஸ், சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய குரு சிவஸ்ரீ.கே.கிருஸ்நானந்த குருக்கள், பிரம்மஸ்ரீ.பி.பிரனவசர்மா குருக்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -