53 பயணிகளுடன் ட்ரான்ஸ் ஏசியா பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து


தைவான் நாட்டை சேர்ந்த ட்ரான்ஸ் ஏசியா பயணிகள் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தய்பேயில் உள்ள கீலங் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சங்ஷான் விமான நிலையத்திலிருந்து 53 பயணிகளுடன் தைபேயிலிருந்து கின்மென் தீவுகளுக்கு சென்ற ஏ.டி.ஆர்-72 என்ற இந்த விமானம், அந்நாட்டு நேரப்படி காலை 10.55 மணியளவில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து அங்குள்ள பாலத்தின் மீது மோதி கீலங் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. கீலங் ஆற்றங்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விமானம் விழுந்ததால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இது வரை 10க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் 40 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. முன்னேறிச்செல்லக்கூடிய வேகத்தை விமானம் பெற முடியாததால் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் கார் ஒன்றும் சேதமடைந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -