மஹிந்தவின் பிறந்தநாள் கொண்டாட்டமும்:அக்கரைப்பற்று மக்களுக்கு சமூர்த்தி ஏமாற்றமும்..!

டந்த ஜனாதிபதித்தேர்தல் காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அத்தினத்தில் வீடு திருத்துவதற்கென இலவசக்கொடுப்பனவாக ரூபா10ஆயிரம் தருவதாக கூறி அக்கரைப்பற்றுப் பிதேசசபைக்குட்பட்ட கிராமிய சமூர்த்திப் பயனாளிகளை அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்திற்கழைத்து அன்றைய நாள் முழுவதும் காக்கவைத்து விட்டு சமூர்த்தி வங்கியின் பணம்மீழப்பெறல் படிவத்தில் பயனாளிகளிடம் ஒப்பம் வாங்கி ரூபாய் 2500மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

மேற்படி தருவதாகக் கூறிய ரூபா 10ஆயிரத்தின் மீதியான ரூபா 7500 நமக்குக் கிடைக்குமோ இல்லையோ என மக்கள் இன்றுவரையும் எதிர்பார்த்த வண்ணமிருக்கின்றனர் ஏனெனில் ஏனைய பிரதேசங்களில் ரூபா 10ஆயிரமும் மொத்தமாக கொடுபட்டு விட்டதாக மக்கள் அறிந்துள்ளார்கள். 

எமது பிரதேசத்தில் இப்பணம் இதுவரை கிடைக்காததினால் சில அதிகாரிகளின் வழமைபோல மக்கள் பெயரால் மீதிப் பணம்களவாடப்பட்டுவிட்டதோ?. என்ற பயம் மக்கள் மத்தியில் இப்போதுமிருந்து வருகிறது.

நேர்மையான செயற்பாடுகளுக்கான புதிய அரசின் பயணத்தில் நிதி தொடர்பான சந்தேகங்களை மக்கள் மத்தியில் விட்டுவைப்பதானது உண்மையான அதிகாரிகளின் மீதும் அரசின் மீதும் நம்பிக்கைகொண்டுள்ள மக்களை அதிருப்திக்குளாக்கி நேர்மையான நடவடிக்கைகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் ஒன்றாகவும் அமையும்.

எனவே குறிப்பிட்ட விடயத்தினை உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு இது தொடர்பாக மக்களுக்குத் தெளிவும் பலனும் கிடைக்க ஆவனசெய்யுமாறு அக்கரைப்பற்றுப் பிரதேச கிராமிய சமூர்த்திப்பயனாளிகள் சார்பாய்க்கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
எச்.ஜே.எம். இன்ஹாம் 
எதிர்க்கட்சித் தலைவர்
பிரதேச சபை அக்கரைப்பற்று.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -