அரசாங்க உத்தியோகத்தர்கள் உடனடி ஓய்வூதியம் பெற முடியாதா அவல நிலை சுற்றறிக்கை 30/88!

முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்-

ரசாங்க உத்தியோகத்தகராக 20 வருடங்களுக்கு மேல் அயராது சேவையாற்றி சுகயீனமுற்று அல்லத வேறு தவிர்க்க முடியாத காரணத்தினால் 30/88 சற்றறிக்கைகக்கு அமைவாக இளைப்பாறும் ஒரு அரச உத்தியொகத்தர் அவரது 55 வயது முடிவில் தான் ஓய்வூதியும் மற்றும் திரட்டிய மொத்த சம்பளம் மற்றும் சகல சலுகைகளையும் பெறுவதற்கு உரித்துடையராகின்றார்.

இவ்வரசாங்க உத்தியோகத்தரும் அவரின் குடும்பமும் ஓய்வூதிய பணம் பெறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் குடும்பத்தை பராமரிக்க முடியாது.மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வுத்தியோகத்தருக்கு வேலை செய்வதற்கு சுகமில்லாத நிலையில் இவரின் பிள்ளைகளின் படிப்பு , நாளாந்த குடும்ப செலவினம் , தொழில் முயற்சி மற்றும் இன்னோரன்ன தேவைகளுக்கு மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வேறு நபர்களின் உதவியை நாடவேண்டி உள்ளதால் நிம்மதியற்று வாழவேண்டியுள்ளது.

சேவையில் இருக்கும் போது ஒரு உத்தியொகத்தர் காலமாகிவிட்டால் அவரின் சேவைக்கு உடனடி ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இதனால் அவரின் குடும்பம் நன்றாக பராமரிக்க படுகின்றது.

அத்துடன் சேவையில் உள்ளவர்களுக்கு கூட்டப்பட்ட கொடுப்பனவுகள் அனைத்தும் 30/88 சுற்றறிக்கைக்கு அமைவாக இளைப்பாறியவர்களுக்கும் வழங்கப்பட்டு அவர்களும் உள்வாங்கப்படுவது நீதியானதாகும்.

எனவே மேற்கூறப்பட்ட காரணங்களை கருத்தில் கொண்டு 30/88 சுற்றறிக்கைக்கு அமைவாக இளைப்பாறும் உத்தியோகத்தர் ஓய்வூதியத்தை உடன் வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்வறிக்கை சமர்பிக்கப்படுகிறது.

இவ்விடயம் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -