தெருச்சண்டையிடுவதை தவிர்த்து காங்கிரசின் இருப்பை உறுதிப்படுத்த உறுப்பினர்கள் உழைக்க வேண்டும்!

இர்ஸாத் ஜமால் (எம்.ஏ)-

மூகத்தின் இருப்பையும், உரிமையையும் பாதுகாப்பதற்கான ஜனநாயக போராட்டத்தின் துடுப்பாகவும், ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டதுதான் மரச்சின்னத்தோடு உதித்தெழுந்த ஸ்ரீ.மு.காங்கிரஸ்.

மரம் தலைத்து துளிர் விட்டு விருட்ஷமாக வளர்ந்து மக்கள் மனதுகளில் வேரூன்றி நின்ற போதும் பதவிகளுக்கும், அரசியல் சுகபோகங்களுக்கும் ஆசைப்பட்டவர்களும், கட்சியை பிளவுபடுத்துபவர்களும் இன்று போல் அன்றும் இருந்தார்கள். 

ஆனால் யாப்பை வரைந்தவர் யாவராலும் அறியப்பட்டவர் என்று பார்க்கப்படவில்லை, தலைமையால் தூக்கிவீசப்பட்டார்கள் இன்றய தலைமை.......... ?.

தலைவர் அஷ்ரபின் உயிர் பறிப்பால் வாடிப்போன மரத்திற்கு வந்த தேர்தலில் மக்கள் ஊற்றிய வாக்கு நீரால் புத்துயிர் பெற்ற மரம் தலைமக்கு ஆசைப்பட்டவர்களால் துண்டாடப்பட்டு தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் போன்ற பிரதேச, மாகாண வாதக்கட்சிகள் தோற்றம் பெற்றதால் காங்கிரஸின் அணு ஆயுதம் பேரம்பேசும் சக்தி இழக்கப்பட்டது.

இக்கட்சிகள் கடந்த தேர்தல்களில் காங்கிரசுக்கு சவால்மிக்கவையாக காணப்பட்டாலும், அ.இ.ம.காங்கிரஸ் கிழக்கில், குறிப்பாக அம்பாறையில் புதிய உதயமானது எதிர்பார்த்திருக்கும் பொதுத்தேர்தலில் காங்கிரசுக்கு பலத்த சவாலாக அமைவதோடு, காங்கிரஸின் பெரும்தொகையான ஆதரவாலர்களை தன்பக்கம் அல்லிச்செல்றால் அது காங்கிரசுக்கு சாவுமணியாகும். திருகோணமலை தொடக்கம் பொத்துவில் வரை அமைச்சர் ரிஷாதிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பும்,கலந்து கொண்ட மக்கள் தொகையும் எச்சரிக்கை மணியாக இருக்கலாம். 

காங்கிரசின் வீழ்ச்சிக்கு வித்திட்டுபவைகளாக தலைமை தலைமைத்துவ பண்பை இழப்பதையும், ஸ்திரமற்ற கொள்கை, தலைமையால் மேற்கொள்ளப்படும் சமாளிப்புகள், ஏமாற்று அரசியல் அதிகாரம், அபிவிருத்தி வாக்குறுதிகள், வெளிப்படையின்மை, உறுப்பினர்களுக்கிடையிலான பதவிமோகம் போன்றன காரணங்களாக அமைந்த போதிலும் ஏமாற்று வாக்குறுதியே பிரதானமாக இருக்கலாம். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் எமக்கே என்ற வாக்குறுதியின் இறுதிநிலை வங்குறோத்து அரசியலே!.எத்தனையோ நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்.

முதல் அமைச்சை காங்கிரசுக்கு வழங்குவதாகவும், முதல்வரை தெரிவுசெய்யும் சுதந்திரம் தலைமைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 72மணித்தியாலங்களுக்குள் யாரென அடையாளப்படுத்தப்படுவார் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இந்த அறிவிப்பிற்கு முதல் கி.மா.சபை உறுப்பினர்களால் உசுப்பேற்றப்பட்ட மக்கள் பிரதேசவாத விஷத்தினை கக்க ஆரம்பித்தோடு பல தகுதி, தராதரங்களையும் முன்வைத்து தங்கள் உறுப்பினரை முதல் அமைச்சர் கதிரையில் அமர்த்தி அழகு பார்க்குமாறு அறிக்கை விட்டு அதிகாரப்பிச்சை கேட்டதோடு நின்றுவிடவில்லை, தலைமைக்கு அழுத்ததினை கொடுக்கின்றனர். 

கட்சியின் ஸ்திரதன்மையினை பலப்படுத்துவதற்கும், இழந்த ஆதரவினை மீட்டெடுப்பதற்கும் முஷ்தீபுகளை முடுக்கி விடவேண்டிய தருணத்தில் அதிகாராச்சண்டை பிடிப்பது கட்சிக்கு ஆபத்தானதாகும்.

முதலமைச்சு விடயத்தில் அணுகுண்டு த.தே.கூட்டமைப்பால் வீசப்பட்டபோது சின்னாபின்னாமாக்கப்பட்ட பிரதேச வாத முதலமைச்சுக் கோரிக்கை அடங்கிப்போய் இருந்தாலும், மத்திய அரசில் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் துண்டுச்சண்டை போட ஆரம்பித்தனர். 

த.தே.கூட்டமைப்பின் தாராள விட்டுக்கொடுப்பால் கிடைக்கப்பெற இருக்கும் முதல் அமைச்சுப்பதவிக்கு மீண்டும் பிரதேச வாதம் பேச ஆரம்பித்து விட்டார்கள் காங்கிரசுக்காரர்கள்.

இறுதியாக பாராளுமன்ற உறுப்பினரை இழந்திருக்கும் சம்மாந்துறைக்கு முதல் அமைச்சு கொடுக்கப்பட வேண்டுமாம் என்று அறிக்கை விட்டிருக்கின்றார் அம்மண்னின் காங்கிரசின் சபை உறுப்பினர். காங்கிரசால் சம்மாந்துறையின் பாராளுமன்ற உறுப்புரிமை விழுங்கப்பட்டதா?.... என்பதை ஆராய்ந்தால்இ குறித்த கோரிக்கை வலுவிழந்து போய்விடும்.

சவால் மிக்க தேர்தல் களத்தில் தெருச்சண்டையிடுவதை தவிர்த்து காங்கிரசின் இருப்பை உறுதிப்படுத்த உறுப்பினர்கள் உழைக்க முன்வர வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -