சுதந்திர தினத்தில் சுத்தமான தேசம் சின்னப்பாலமுனையில்!

பி. முஹாஜிரீன்-

லங்கையின் 67 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் சின்னப்பாலமுனை சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தினால் சுதந்நதிர தினமான இன்று (04) புதன்கிழமை மாபெரும் சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

'சுதந்திர தினத்தில் சுத்தமான தேசம்' எனும் தொனிப் பொருளில் சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி. முஹாஜிரீன் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதான நிகழ்வின் மூலம் சின்னப்பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மைதான வளாகம் உட்பட பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் நிருவாகிகள் உள்ளிட்ட கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -