பொத்துவில் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்யும் அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!

இர்ஸாத் ஜமால் (எம்.ஏ)-
விவசாயத்திற்கு பெயர் போன பொத்துவில் மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இராணுவத்தினராலும், வனஇலாகா அதிகாரிகளாலும் ஆக்கிரமிப்புச்செய்யப்பட்டுள்ளது. காணிகளுக்குள் விவசாயிகள் நுழைய முற்படும் போதெல்லாம் விவசாயிகள் தடுக்கப்படுகின்றனர். விவசாய அமைப்புக்கள், கிராம நிலதாரிகள்,அதிகாரிகளுக்கோ எதுவிதமான முன் அறிவித்தல்கள் வழங்கப்படாமல் வனஇலாகா அதிகாரிகளால் இரவோடு இரவாக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டு எல்லைக்கட்டைகளும் இடப்படுள்ளன. 

இப்பிரச்சினை தொடர்பாக கடந்த 2015.02.01ம் திகதி பொத்துவில் பிரதேச சபை புதிய கட்டிடத்தில் நடைபெற்றது ஸ்ரீ.மு.காங்கிரஸின் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்ப்பாசன வடிகாலமைப்பு அமைச்சர் ரஊப் ஹகீம், குழுவினர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ் அப்பதுல் வாஸித் அவர்களால் அமைச்சர் ஹகீம் அவர்களின் கவணத்திற்கு கொண்டுவரப்பட்டது.

வனஇலாகா அதிகாரிகளுடன் இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் காணிகளை தன்வயப்படுத்துவதற்கான அத்தாட்சிகளை சமர்ப்பிக்குமாறு வினவப்பட்டபோது அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட பல்வேறு சாட்டுக்காரணங்களும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன் சட்டத்திற்கு முரணாக இச்செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்திற்கு முன்நிறுத்தப்பட வேண்டும் எனவும், பொத்துவில் பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளான, கல்வி, சுகாதாரம், காணி, போக்குவரத்துப் பிரச்சினைகளை நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கி சகல பிரச்சினைகளுக்குமான தீர்வினையும் பெற்றுத்தருமாறும் அமைச்சரை வேண்டிக்கொண்டார்.

குறித்த பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் கூட்டம் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ஹகீம், அமைச்சின் அதிகாரிகளும் பிரதேச சபை உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச சபையால் முன்வைக்கப்பட்ட ஆவன ஆதாரங்களை பார்வையிட்ட அமைச்சர் குறித்த பிரச்சினைகளை துரித கதியில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வருகைதந்திருந்த திணைக்கல அதிகாரிகளுக்கு பணிப்புரையினை விடுத்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான ஸ்ரீ.மு.காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹகீம்,செயலாளர் ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிம், ஹரிஸ், கி.மா.சபை உறுப்பிர்களான மன்சூர், ஜெமீல்,ஆரிப் சம்சுதீன் மற்றும் பொத்துவில் அரச திணைக்கள அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -