ஆர்.குல்ஸான் எபி-
முஸ்லிம் சமூகம் அபிவிருத்தியை பயனித்திருப்பின் முஸ்லிம் காங்கிரஸை விட்டு வெளியேறி அதாஉல்லாவோடு அல்லது ரிஷாட் பதியுதினோடு இணைந்திருப்பர்.
அதே போன்று கிழக்கு மாகாணத்தில் அல்லது அம்பாரை மாவட்டத்திற்கு கட்சியின் தலைமைத்துவம் வேண்டுமென்றிருந்தால் கட்சியின் உண்மைப் போராளிகள் ரவூப் ஹக்கீமை தலைவராக ஏற்றுக் கொண்டு இருந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று தனிநபர் பதவிகளுக்காக பிரதேச வாதம் பேசும் ஜெமில் போன்ற அரசியல் வாதிகள் எப்படி முழு கிழக்கு மாகாணத்தையும் பிரதிபலிக்க முடியும்.
சாய்ந்தமருதுக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கூறுவது எவ்விதத்தில் பொருத்தம் என உண்மை போராளிகள் கேட்கின்றனர். ஜெமீல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியது.சாய்ந்தமருது மக்களால் மாத்திரமா என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை.
ஜெமில் இன்னுமொறு முறை தேர்தலில் போட்டியிடுவாராயின் மற்றைய பிரதேசங்களுக்கு சென்று எப்படி வாக்கு கேட்க முடியும்
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயிருந்து இன்றுவரை நூறு வீதம் ஆதரவளித்த கிராமங்களான அட்டாளைச்சேனை, இறக்காமம் போன்ற கிராமங்கள் எதுவித பதவிகளும் வழங்கப்படாமல் இருந்த போதும் இன்னும் கண்மூடித்தனமாக ஆதரவளித்து வருகின்ற நிலையில் சாய்ந்தமருதுக்கு முதலமைச்சர் பதவி,மற்றும் மத்திய அமைச்சுப் பதவி வழங்க கோருவது நியாயமா?
கட்சியின் தலைவர் சாய்ந்தமருதுக்கு தேசியப்பட்டியல் மூலம் நிஜமுதீனை நியமித்து பிரதியமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்த போது எந்த கிராமங்கள் கேள்வி எழுப்பின.இந்த உண்மை ஜெமிலுக்கு இன்னும் புரியாதது ஏன்?
தலைவரின் தீர்மானம் சமூகத்தை நோக்கிய நியாயமான தீர்மானம் என்பது பிரதேச வாதங்களை கடந்த உண்மைப் போராளிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.என்பது மட்டும் உண்மை
