எம்.எஸ்.சம்சுல் ஹூதா-
பொத்துவில் மக்களுக்கு அரசியல் வழிகாட்டல்களை கொடுக்கும் ஒரு அரசியல் விருட்சமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கப் போகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று பொத்துவிலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு கூட்டம் பொத்துவில் பஹ்ரியா வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில்-இதற்கு பின்னரும் இப்படிப்பட்ட ஒரு சமூகத்தை அழிக்க துடிக்கும் சக்திகளுக்கு சாமரம் வீசும் ஒன்றாக வைத்துக் கொண்டு இருக்காது என்பதை உணர்த்தும் வகையில் நாம் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து எமது சமூகத்தின் எல்லா தரப்புக்களுடனும் ஜனநாயக ரீதியில் கலந்துரையாடல்களை செய்து எமது ஒட்டு மொத்த ஆதரவை நாம் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கி இந்த நாட்டின் இன ஒற்றுமை, சமூக பாதுகாப்பு என்பனவற்றுக்கு வித்திட்ட கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை நாம் மக்கள் மயப்படுத்துகின்றோம்.
மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இந்த கட்சியினை உருவாக்கியதன் யதார்தத்தை கற்றுத் தந்த மண் இன்று எதனைப்பற்றி பேசுகின்றது என்றால் இந்த கட்சியினை உருவாக்கி முழு இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமையினை உருவாக்கிய இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட நோக்கம் மறந்துவிட்டுள்ளதை இங்கு இந்த மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை பார்க்கின்ற போது கவலைத்தருகின்றது.
30 வருடங்களாக இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்து நீங்கள் அனுபவித்தது எதுவும் இல்லையென்று ஆதங்கப்படுகின்ற போது அதனை பார்த்து நாங்கள் கவலையடைகின்றோம்.வெறுமனே பதவிகள் மட்டும் தான் தேவை என்று நினைப்பது முறையற்றதொன்றாகும். அல்லாஹ் நாடியவர்களுக்கே கொடுப்பான் என்ற நம்பிக்கை எம்மிடத்தில் இருக்க வேண்டும். வெறும் பொய் வாக்குறுதிகளை உங்களுக்கு வழங்குவதற்hக நாங்கள் இங்கு வரவில்லை. நீங்கள் எங்களது பாதையினை பாருங்கள், ஏனைய மாவட்டங்களில் இடம் பெறும் அபிவிருத்திகளை பாருங்கள், அந்த அபிவிருத்தி உங்களது காலடிக்கு வந்து விழுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை நீங்களும் பெற்றுக் கொள்ள அனைவரும் இணையும் ஒரு சந்தர்ப்பத்தை எமது கட்சி உங்களுக்கு பரிசாக கொடுக்க இருக்கின்றது.
நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் உங்களது பிரதேசத்துக்கு இந்த அபிவிருத்திகளை நாம் கொண்டுவருவோம் என்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் கூறினார்.
மேலும் இஸ்லாமிய ஆசிரிய சங்கத் தலைவர் மன்சூர் அனஸ் கௌரவ அமைச்சர் அவர்களிடம் பொத்துவில் குறிப்பிட்ட சில குறைபாடுகள் காலா காலாமாக நிலவி வருகின்றது. அதாவது,
1. பொத்துவில் பிரதேசத்திற்கு அரசியல் பிரதிநிதி இல்லாமை
பாரளமன்ற அமைச்சோ உறுப்பினரோ. மாகாண சபையில் அமைச்சோஃஉறுப்பினரோ.
2. கல்வி அபிவிருத்தி
உப வலயக் கல்வி அலுவலகம் வலயக் கல்வி அலுவலகமாக மாற்றப்படல் வேண்டும்.
பாடசாலைகளுக்கான பௌதீக வளங்கள்.
ஆசிரியர் பற்றாக்குறை.
3. சுகாதாரம்
பொத்துவில் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படல்.
மகப்பேற்று வைத்திய நிபுணர், சிறுபிள்ளை வைத்திய நிபுணர்.
தமிழ் மொழி பேசக்கூடிய வைத்தியர்கள், தாதிமார்கள், ஊழியர்கள்.
4. போக்குவரத்து
பிரதான பஸ் டிப்போவாக மாற்றப்படல் வேண்டும்.
பஸ் சாரதி, நடத்துனர்கள் உள்ளூர் வாதிகளாக இருத்தல்.
5. விவசாயம்
கிரான்கோவை, வேகாமம் போன்ற காணிகளை விடுவித்து தர வேண்டும்.
6. வீதி அபிவிருத்தி
உள்ளூர் வீதிகளின் வகொன் அமைப்புக்கள.
உள்ளக வீதிகள் மீள் புனரமைப்பு.
7. கைத்தொழில் அபிவிருத்தி.
செங்கல், யோகட் உற்பத்திகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
8. வேலை வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நிவர்த்தி செய்து தருமாறு வேண்டிக் கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸி;ன் பொத்துவில் மத்திய குழு தலைவர் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,ஆசிரியர் அனஸ்,பொறியிலாளர் முர்சித்,சட்டத்தரணி இஸ்மாயில் ஆதம் லெப்பை உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இதன் போது கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)