அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாநகரத்தில் உற்பட்ட பிரதேசத்தில் வாழும் முஸ்லீம்கள் தமது பிள்ளைகளை அரச பாடசாலைகளில் 1ஆம் தரத்தில் சேர்த்துக் கொள்வதற்காக நாளாந்தம் அரசியல் வாதிகளின் அலுவலகங்களது படிகள் ஏறி கஸ்டப்படுகின்றனர்.
மேல் மாகாண சபை உறுப்பிணர் முஜிபுர் ரஹ்மான். தெரிவித்தார்.மேல் மாகாண சபை உறுப்பிணர் முஜிபுர் ரஹ்மான் தெமட்டக்கொடை அல் ஹிஜ்ஜிரா வித்தியலயத்தில் பொரளை அகதியா பாடசாலையின் நடாத்தப்பட்ட மீலாதுன் நபி விழா மற்றும் பரிசலிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வு அகதியா பாடசாலையின் அதிபர் சிப்லி காசீம் தலைமையில் நடைபெற்றது. கௌரவ அதிதியாக புரவலர் ஹாசீம் உமர், அமானா வங்கியின் தலைவர் பைருஸ் புருவ் வை.எம்.எம்.ஏ தலைவர் தாசீம் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் எனது அழுவலகத்திற்கு மட்டும் ஒரு நாளைக்கு 25க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பாடசாலைகளில் தமது பிள்ளையைச் சேர்த்துக்கொள்ள உதபும்படி வருகின்றார்கள்.
ஆனால் இந்த தாய்மார்களை அமைச்சின் அல்லது அரசியல் வாதிகளிடம் அனுப்பிவிட்டு கணவன் மார்கள் தமது பிள்ளையின் கல்வியில் அக்கரை இல்லாமல் இருக்கின்றனர்.
உங்களது கணவன்மார்கள் எங்கே எனக் கேட்டால் அவர்கள் வியாபாரத்திற்குச் சென்றுவிட்டதாகவும் அவர் பிள்ளையின் கல்வியில் அக்கரை செலுத்துகின்றார் இல்லை. அதுவும் முஸ்லீம் பெண்பிள்ளைகளுக்கே இவ்வாறு தாய்மார்கள் அனுமதி பெறுவதற்காக மிகவும் கஸ்டத்ததை எதிர்நோக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிங்களமொழி பாடசாலைகளுக்கே இவர்கள் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர்.
இவ் வருடம் மட்டும் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லீம் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் கொழும்பில் முஸ்லீம் பாடசாலைகளில் 300 பேருக்கே அனுமதி கிடைக்கின்றது. ஏனைய 1700 பிள்ளைகளின் கல்வி நிலை என்ன ? ஏனையவர்கள் சர்வதேச பாடசாலையை நோக்கிப் படையெடுக்கின்றனர். இதில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆங்கிலம் பேச வேண்டும் மென்று கல்வி புகட்ட விரும்புகின்றனர். அதனால் வீட்டில் சிங்களமொழியோ ஆங்கில மொழி கற்பிபதற்கோ அல்லது அந்தப்பிள்ளையின் வீட்டுச் சூழல் இல்லை.
சிங்கள மொழி முலம் பாடசாலை அனுமதி கிடைத்த மாணவிகள் 80 வீதமான சிங்கள மாணவர்களோடு பரீட்சையில் போட்டி போட முடியாமல் தமது கல்வியை க.பொ.த.சா.தரத்தில் சித்தியடைய தவறி தமது கல்வியை இடை நடுவில் நிறுத்திக் கொள்கின்றனர்.
கொழும்பில் முஸ்லீம் பெண்களுக்கென்று தெமட்டக்கொடை கைரியாவும், பாத்திமா வித்தியாலயம், பம்பலப்பிட்டி முஸ்லீம் பெண்கள் பாடசாலை மட்டுமே உள்ளது.
மொரட்டுவை தொட்டு – வெள்ளம்பிட்டி, ராஜகிரிய தெமட்டக் கொட, மாளிகாவத்தை குணசிங்க புர போன்ற பிரதேசத்தில் முஸ்லீம் பெண்களுக்கு இவ் 3 பாடசாலைகள் மட்டுமே உள்ளது. அப் பாடசாலைகளில் 400 மாணவிகள் மட்டுமே அனுமதிக்க முடியும்.
தெமட்டக் கொடை கைரியாவில் இவ் ஆண்டு 700 முஸ்லீம் மாணவிகள் தரம் 1க்கு அனுமதி கேட்டிருந்தனர். அங்கு 120 மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும். ஏனைய 580 மாணவிகளுக்கு பாடசாலை அனுமதி கிடைக்க வில்லை. அதற்காக மருதானை தொட்டு பேஸ்லைன் வீதி வரையிலான தெமட்டக்கொடை வீதியில் மட்டும் 27 சர்வதேச பாடசாலைகள் உள்ளன. அவர்கள் ரீயுசன் சென்றர் என பதிந்து ஒரு வீட்டை 25ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து 10 ஆண்டு ஆங்கில மொழியில் கற்ற பெண்பிள்ளைகளை வைத்து சர்வதேச பாடசாலை என்ற பேர்வையில் பிசினஸ் நடாத்துகின்றனர். எமது முஸ்லீம்கள் பிசினஸ் பண்னுவதில் சிறந்த கெட்டித்தணம் கொண்டவர்கள். பெட்டிஸ், கட்லட் கடை போன்று பாக்கின்ற இடமெல்லாம் சர்வசேத பாடசாலை மாதம் 50 ஆயிரம் அனுமதி மாதாந்தம் 5ஆயிரம் ருபா கொடுப்பணவு, புத்தக செலவுக்கு 5ஆயிரம் இப்படியாக ஒரு வருடம் இருவருடம் என அங்கு மாணவர்கள் கற்று விட்டு அங்கு பணம் செலுத்த முடியாது மீள அரச பாடசாலைகள் தேடுகின்றனர்.
அரச பாடசாலைகளில் தரம் 1 இல் இருந்த 6ஆம் ஆண்டுவரை ஆங்கில மொழி வகுப்புக்கள் இல்லை. பிள்ளைக்கு ஒழுங்காக 3 மொழியும் தெரியாத நிலையில் உள்ளது.
தமது கணவர் துபாயில் இருந்தார். அவர் பணம் அனுப்பினார் தற்பொழுது அவர் நாட்டுக்கு வந்துவிட்டார். அவருக்கு தொழில் இல்லை பிள்ளைக்கு சர்வதேச பாடசாலைக்கு பணம் செலுத்த பணம் இல்லை எனக் கூறுகின்றனர். இது தான் கொழும்பில் வாழும் முஸ்லீம்களின் கல்வி நிலையாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)