100 வேளைத் திட்டத்தின் கீழ் 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க உள்ளேன்-சஜித் பிரேமதாச!

அஸ்ரப் ஏ சமத்-
ன்று காலை வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச தான் நாடு முழுவதிலும் 100 வேளைத் திட்டத்தின் கீழ் 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க உள்ளேன். இதற்காக தனக்கு தனது அமைச்சின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் 1 இலட்சம் ருபா நிதி கடனாகவே வழங்க முடியும். அதற்காக இந்த நாட்டில் நிர்மாணத் கைத்தொழில் சங்கத்தினா் அழைத்துள்ளேன். எனக் கூறினாா்.

இக்டாட் நிறுவனத்தில் உள்ள சவ்சிரிபாயவில் இந் நிகழ்வு நடைபெற்றது.

உங்களால் முடிந்தளவு எனக்கு ஆகக் குறைந்தது 25ஆயிரம் வீடுகளுக்கு உதவ முடியுமா ? எனக் அமைச்சா் நிர்மாண ஒப்பந்தக்காரா்களிடம் கோரிக்கை விடுத்தாா். அனால் கடந்த கால அரசாங்கத்தில் வீதி மற்றும் அரச நிறுவனங்களில் இருந்து எதுவித நிர்மாண ஒப்பந்தமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. சகல நிர்மாணங்களும் முன்னாள் ஜனாதிபதியின் அருகில் உள்ள ஒப்பந்தக் காரா்களுக்கும் சீன கம்பணிகளுக்குமே வழங்கப்பட்டது. 

நாங்களே மிகவும் கஸ்டத்தில் இந்தத் தொழிலை செய்து வருகின்றோம். எங்களது தொழிலை தொடா்ந்து நடாத்த முடியாமல் எங்களது ஊழியா்களுக்கு சம்பளம் கனரக வாகானங்களையும் கொள்வனவு செய்து வங்கி கடன் பெற்றதால் இத்துறையில் மிகவும் பின்தள்ளப்பட்டுள்ளோம். அது மட்டுமல்லாமல் நிர்மாண ஒப்பந்தத்துக்காக 1 இலட்சம் ருபா நிதியை இக்டாட் நிறுவனத்திற்கு செலுத்தி வருகின்றோம். அந்த நிதியை திரைசேரி எடுத்து வேறு விடயங்களுக்கு செலவளிக்கின்றது.

கடந்த காலத்தில் முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்சவினால் 50 மில்லியன் ருபா மஹாஅபிமானி எனும் திட்டத்திற்காக எங்களது நிதி பெறப்பட்டது. விளம்பர நிறுவனத்திற்கும் பத்திரிகைகள் தொலைக்காட்சி விளம்பரத்துக்கும் ஹோட்டல்களில் பத்திரிகை மாநாடும் நடாத்தி வினாக செலவளிகக்ப்பட்டது. அந்த நிதியை இன்று இருந்திருந்தால் உங்களது செவன வீடமைப்பு அன்பளிப்பாக தந்திருக்க முடியும் என பதிலளித்தாா். வருகை தந்த நிர்மாண ஒப்பந்தக்காரா்கள்.

அமைச்சா் சஜித் பிரேமதாச உடனடியாக திரைசேரி செல்லும் பணத்தினை மீள பெற்றுவதற்கும் அதனை ஒப்பந்தக்காரா்களுக்கு சகன திட்டத்தில் அதனை நிறுத்துவதற்கும் அமைச்சரவை பத்திரமொன்றை தயாரிக்கும்படி செயலாளாருக்கு பணிப்புரை விடுத்தாா.

எனது எந்த ஒரு ஒப்பந்தமும் ஒளிவு மறைவுமின்றி விளம்பரப்படுத்தப்படும். எனது அமைச்சின் கீழ் உள்ள அதிகார சபைகள் நிறுவனங்களில் நான் ஒருபோதும் எனது கட்சிக் காரா் சொந்தக் காரா் தோ்தலில் உதவி செய்தவா் என பணிப்பாளா் சபை நியமிக்கப்போவதில்லை ஒவ்வொரு துறையிலும் சிறந்த நிபுனத்துவம் பெற்றவா்களை தேடுகின்றேன். எனக் கூறினாா்.

எனது அமைச்சினை நடைபெற்றுள்ள இலஞ்சம் நிதி மோசடிகளை சர்வதேச கணக்காய்வாளா் கம்பணி எனது வேண்டுகோளுக்கிணங்க இலவசமாக கணக்காய்வு செய்து வருகின்றது. அதன் பின் இந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவணங்களில் ஊழல் நிதி மோசடி அதற்கு உடந்தையாணவா்கள் வெளியில் அனுப்பபடுவாா்கள். என அமைச்சா் சஜித் உரையாற்றினாா்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -