மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
இலங்கையில் நீண்ட காலமாக ஆணாதி;க்க தன்மை கொண்ட சமுகமே காணப்படுகிறது. பால்நிலை மற்றும் பால் குறி;த்த எண்ணக்கரு அந்நியமானதாகவும், மேற்கத்திய தன்மையானதாகவும் உள்ளது என மக்கள் மத்தியில் தோன்றியுள்ள எண்ணக்கருவே பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் இன்று அதிகரித்துக் காணப்படக் காரணம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இலங்கையில் நீண்ட காலமாக ஆணாதி;க்க தன்மை கொண்ட சமுகமே காணப்படுகிறது. பால்நிலை மற்றும் பால் குறி;த்த எண்ணக்கரு அந்நியமானதாகவும், மேற்கத்திய தன்மையானதாகவும் உள்ளது என மக்கள் மத்தியில் தோன்றியுள்ள எண்ணக்கருவே பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் இன்று அதிகரித்துக் காணப்படக் காரணம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
தேவை நாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் திருமதி. சங்கீதா மற்றும் சட்டத்தரணி. அருள்வாணி சுதர்சன் இவர்களின் கூட்டுத் தலைமையில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அலுவலகத்தில் பொலிஸ் மகளிர், சிறுவர் பிரிவு உயர் அதிகாரிகளுக்கான பால்நிலை பற்றிய இரண்டு நாள் பயிற்சியில் வளவாளராகக் கலந்து கொண்டு விரிவுரையாற்றிய அஸீஸ் மேலும் தொவிக்கையில், ஒரு பெண் பாதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு வருகின்ற போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் அம்முறைப்பாட்டினை பதிவு செய்ய வேண்டும்.
அப்போது மூன்று விடயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும். குறி;த்த பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் செயலானது பாலியல் வன்முறையா, பால்நிலை வன்முறையா அல்லது குடும்ப வன்முறையா என்பதை பொலிசார் புலனாய்வின் போது விளங்கி;க் கொள்ள வேண்டும். அதன்பின் பொலிசார் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்களுக்கான விசாரணையை துடிப்புடன் செய்தல் வேண்டும். இன்று அனேகமான முறைப்பாடுகள் பால்நிலை என்ற எண்ணக்கருவினை தவறாக விளங்கி;க் கொண்டதன் காரணமாகவே உரிய பரிகாரம் கிடைக்கப்பெறாமல் வழக்கு தாமதமாகிச் செல்கிறது.
பால் என்பது இயற்கையாகப் பிறப்பில் தோற்றுவிக்கப்படும் ஆண், பெண் அல்லது இரு தன்மையும் இணைந்த ஓர் உடலியல் மற்றும் உயிரியல் சார்ந்த விடயமாகும். இது மனித இனத்தின் இனப்பெருக்கத்திற்கான உடலியல் உறுப்புக்களுடனும் மற்றும் உயிரியல் (ஹோர்மோன் சுரப்பு) உடன் சம்பந்தப்பட்டது.
பால்நிலை என்பது சமூகத்தினால் வரையறுக்கப்படுவது. பெண்ணுக்கும், ஆணுக்கும் அல்லது இரு தன்மையும் கொண்டவர்களுக்கு சமூகத்தால் வழங்கப்படும் 'நிலை' அல்லது அந்தஸ்து பால்நிலை எனப்படும். சட்டத்தினடிப்படையில் பெண்களும் ஆண்களும் ஒரே தகுதி நிலையை அந்தஸ்தை உடையவர்கள் என்பதால் சம நிபந்தனைகளை விதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு இணக்கப்பாட்டுத் தீர்விலும் ஆண்களும,; பெண்களும் வௌ;வேறு விதமாக நடாத்தப்படல் கூடாது. இவர்களுக்கிடையிலான அதிகாரத் தொடர்பை புரிந்து கொள்ளல் அவசியமாகும்.
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளின் போது பெண்களுக்கெதிரான வன்முறைகளும் அதனோடிணைந்ததாகக் காணப்படுகிறது. இதனை விசாரணை செய்வதி;ல் சமுகத்தி;ல் பொலிசாரின் வகிபாகத்தை புரிந்து கொள்ளல் வேண்டும் எனவும் அஸீஸ் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வின் பொது வாணி சுதர்சன் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.உபாலி ஜெயசிங்க இவர்களும் கருத்துரை வழங்கினர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)