நிந்தவூரில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் உடல்விருத்தி (ஜிம்) உபகரணங்கள் வழங்கி வைப்பு!



சுலைமான் றாபி-
சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி அவர்களினாதும், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களினதும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பிற்கு உடல்விருத்தி 9ஜிம்) பயிற்சிக்கான உபகரணங்கள் நேற்று (02) வழங்கி வைக்கப்பட்டன. சமூக சேவை அமைப்பின் தலைவரும், கல்முனை கல்வி வலய விளையாட்டு ஆசிரிய ஆலோசகருமான ஐ.எல்.இப்ராஹிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விலே அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி, சமூக சேவை உத்தியோகத்தர் எ.கலந்தர், அம்பாறை மாவட்ட கபடி பயிற்ருவிப்பாளர் எ.எல்.அனஸ் அஹமட் உள்ளிட்ட முக்கியச்தகர்களும், நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் இறுதியில் இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் ஆகியோர்களின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை போத்தியும், ஞாபகசின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -