நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இலவச பாலர் பாடசாலை சீருடை வழங்கும் நிகழ்வு ஒன்று இன்று (01.02.2015) மாலை கர்பலாவில் இடம்பெற்றது.
கர்பலா, அல்-மனார் முன்பள்ளி மாணவர்களுக்கே இவ்வாறு இலவச சீருடை வழங்கி வைக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற கணித ஆசிரியரும் கர்பலா, அல்-மனார் முன்பள்ளியின் தலைவருமான MCM.முஸ்தபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் மற்றும் தலைமைத்துவசபை உறுப்பினர்கள், பள்ளிவாயல் தலைவர், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பாலகர்களின் தாய்மார்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது மேற்படி முன்பள்ளி பாலர்கள் 25 பேருக்கு தலா இரண்டு சீருடை வீதம் 50 சீருடைகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி கர்பலா, அல்-மனார் முன்பள்ளியானது மிகவும் பின்தங்கிய நிலையில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி