ராஜபக்சவினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் முன்னைய ஆட்சியின் போது வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணம், வெளிநாடுகளில் கொள்வனவு செய்துள்ள சொத்துக்கள் பற்றிய தகவல்களை கண்டறியும் பொறுப்பு உலக வங்கியிடம் வழங்கப்படவுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள பணம் மற்றும் சொத்துக்கள் குறித்து தேடிப்பார்த்து அந்த சொத்துக்கள் முறைகேடாக சம்பாதித்தவை என கண்டறியப்பட்டால் அவற்றை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்துவதற்காக உலக வங்கியின் உதவியை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முறைகேடான முறையில் பொது சொத்துக்களை கொள்ளையிடும் அரச தலைவர்கள் பற்றி விசாரணை நடத்த உலக வங்கி ஸ்தாபித்துள்ள திருடிய சொத்துக்கள் மீட்பு முன்முயற்சி என்ற அமைப்பிடம் முறைப்பாடு செய்ய சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன எதிர்வரும் 10 ஆம் திகதி அமெரிக்காவின் வோஷிங்டன் நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
ஊழல் மோசடிகள் பற்றி விசாரணை நடத்த அமைச்சரவை நியமித்துள்ள விசேட குழுவில் ஜே.சி. வெலியமுன அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.