அஷ்ரப் ஏ சமத்-
சாகும்வரை ஜனாதிபதியாக இருக்க கனவுகண்டுகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பிரத்தியேக பாவனைக்காக சகல தொழில்நுட்பங்கள் அடங்கிய விஷேட ஆடம்பர விமானம் ஒன்றை கொள்வனவு செய்ய ஓடர் வழங்கியுள்ளதாகவும் தற்போது அது தொடர்பான செய்திகள வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.
இன்று காலை அவரது காரியாலத்தில் நடந்த ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர்....
உலகில் சர்வதிகார ஆட்சியாளர்கள் தான் சாகும் வரை ஆட்சியில் இருக்க அமைத்து கொள்ளும் சகல நடவடிக்கைகளையும் மஹிந்த ராஜபக்ஷ செய்துள்ளர்.
தனது பிரத்தியேக பாவனைக்காக சுமார் இரு நூறு கோடி ரூபாய் செலவில் ஒரு தனி பிரத்தியேக ஆடம்பர விமானத்தை வடிவமைக்க மஹிந்த அரசு ஓடர் வழங்கியுள்ளது. சதாம் ஹுசைன் கடாபி போன்றோர் கணியவள நாடுகளில் வாழும் மன்னர் பரம்பரையினர் பாவிப்பதாக கூறப்படும் விமானங்களை மிஞ்சும் அளவுக்கு சகல ஆடம்பரங்களுடன் குறித்த விமானத்தை வடிவமைக்க ஓடர் வழங்கப்பட்டுள்ளது என குறிப்ப்பிட்ட அவர்....
குறித்த விமானம் தயாரிப்பு கம்பணியிடம் மஹிந்த வழங்கிய ஆடம்பர விமான ஓடரை ரத்து செய்ய எமது அரசு உடன் அமுலுக்கு வரும் வகையில்உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்னும் எட்டு வருடங்கள் மஹிந்த ஆட்சியில் இருந்திருந்தால் நாங்கள் மண்ணை தின்று மழை தண்ணீரைதான் குடித்திருக்க வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.
