பி. முஹாஜிரீன்-
முஸ்லிம் சமூகம் கௌரவமாக வாழ வேண்டுமென்பதற்காக மஹிந்தவை விட்டு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவை பல அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆதரிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்வந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக வாணிப, கைத்தொழில்துறை அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாலமுனை ஹூஸைனியா கிராமத்தில் (31) சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ.எம். ஹூஸையிர் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த அரசாங்கத்தில் பொதுபல சேனா என்ற நாசகார கும்பல் முஸ்லிம் சமூகத்தை சீரழித்து அவர்களின் பொருளாதாரத்தையும் நசிக்க முற்பட்ட வேளையில் நான் அரசாங்கத்தில ஒரு அமைச்சராக இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக போராடினேன் முஸ்லிம் சமூகம் நசுக்கப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் தலைமையும் பேசாமல் மௌனமாக இருந்தது.
முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எப்போதும் துணிச்சலுடன் செயற்பட்ட வரலாறுகள் உண்டு கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியபோது எனக்கு பல அச்சுறுத்தல்கள் வந்தன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் எவ்வித அபிவிருத்தியும் மேற்கொள்ளாமல் தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வாக்குகளை பெற்று சென்றுவிட்டால் அடுத்த தேர்தல் வரும் போது வருவார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்கொண்டு செல்லவுள்ளோம் இதற்கு மக்களுடையை ஒத்துழைப்பு தேவை. எதிர் வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடுமென்றார்.
இவ் வைபவத்தில் வீடமைப்பு, சமூர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயளாலர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)