கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் வருவதற்கு தடை விதிதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா எதிர்வரும் 28 - 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவில் இந்திய மக்களையும் கலந்துகொள்ளுமாறு யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த அழைப்பை ஏற்று திருவிழா வருவதற்கான முன்னேற்ப்பாடான பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாச்சியர் ராமபிரதீபன் தலைமையில் கச்சத்தீவு திருவிழா தொடர்பான வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடற்படை, கடலோர காவல்படை, சுங்கத்துறை, உளவுத்துறை, வருவாயத்துறை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, மீன்வளத்துறை, தமிழக காவல்துறை மற்றும் அகதிகள் மறுவாழ் துணை ஆட்சியர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருப்பயண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மீனவ சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த வருவாய் கோட்டாச்சியர் ராமபிரதீபன், கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இம்மாதம் 28 ஆம் திகதி நடைபெருகின்றது. இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள் தங்களுக்குறிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டுமென்பதுடன் விலை உயர்ந்த நகை மற்றும் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பணம் எடுத்து செல்லக்கூடாது.
மேலும் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் திருவிழாவிற்கு செல்ல தடைவிதித்துள்ளதுடன். இலங்கையர்களை யாரும் அழைத்துவரக்கூடாது, மற்றும் குறிப்பிட்ட இடத்தை தவிற வேறு இடத்தில் இருந்து செல்ல அனுமதிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
