11 வயது சிறுமிக்கு குழந்தைப் பிரசவிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது!

னது மூத்த சகோதரியின் கணவரினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கருத்தறிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு குழந்தைப் பிரசவிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

11 வயது கருத்தறித்துள்ள நிலையில், அதனைக் கலைப்பது சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்தக் குழந்தையைப் பிரசவிக்க அனுமதிக்க வேண்டும் என நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் விசேட மருத்துவ அதிகாரி கே.எம்.மகசேன ஹட்டன் நீதிமன்ற நீதவானிடம் அனுமதி கோரியிருந்தார்.

இதிலுள்ள உளவியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கினார்.

சிறுமியின் மூத்த சகோதரியின் கணவரினால் குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்தாக காவல்துறையினரின் விசாரணைகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத்தவிர குறித்த சிறுமி பிரதேசத்திலுள்ள மற்றுமொரு இளைஞனினாலும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது மூன்று மாதகால கர்ப்பிணியாக இருக்கும் குறித்த சிறுமி திக்ஓய வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சிறுமி குழந்தையொன்றைப் பெற்றெடுக்கும் அளவிற்கு உடல் பலம் கொண்டவர் இல்லையென அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் நிலை மோசமாக இருந்த போதிலும் கருவைக் கலைப்பது சிறுமியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் குழந்தையைப் ஈன்றெடுக்க அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த சிறுமி நாவலப்பிட்டி மருத்துவமனையிலிருந்து கண்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு பெயர், விபரங்களை வெளியிட முடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
sm.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -