எனது அமைச்சுக்கு:மக்களுக்களுக்காக சேவை செய்யக்கூடியவர்களையே நான் தேடிக்கொண்டிருக்கின்றேன்-சஜீத்

அஸ்ரப் ஏ சமத்-

னது அமைச்சின் கீழ் வருகின்ற 10 அதிகார சபைகள் மற்றும் நிறுவணங்களில் தலைவர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கு அந்தத் துறையில் சிறந்த பாண்டியத்துவம் சர்ந்தவர்கள் மற்றும் அந் நிறுவனத்தினை இலாபமீட்டி மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களையே நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

என சமுர்த்தி வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச அமைச்சா நேற்று இக்டாட்டில் அதிகாரிகள் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு மட்டுமே தலைவர் ஒருவரை அடையாளம் கண்டு நியமித்துள்ளேன். எஸ். பலண்சூரிய இவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் காலத்தில் அவரது அமைச்சின் ஆலோசகராக கடமையாற்றியவர், முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் காலத்தில் இந்த அதிகார சபையின் பொது முகாமையாளாராக கடமையாற்றியவர், முன்னாள் வீடமைப்பு அமைச்சர் சிறிசேன குரேயின் காலத்தில் இந்த அதிகார சபையில் சிரேஸ்ட முகாமையாளர் ஊடகம், தகவல் பிரிவில் கடமையாற்றியவர்.

ஆகவே எனது அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவணங்களில் தலைவர், பணிப்பாளர்கள் எனது அரசியலுக்கு உதபி செய்தவர், அல்லது எனது கட்சிக்காரர், சொந்தக் காரர் போன்றோரை நான் ஒரு போதும் நிறுவனங்களில் நியமிக்கப் போவதில்லை. அரச பொறியியற் கூட்டுத்தாபணத்தின் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியல் விரிவுரையாளர் யாரும் விருப்பம் இருந்தால் எனக்கு அறிவியுங்கள். என அமைச்சர் வேண்டிக் கொண்டார்.

கட்டிடப் பொருட் கூட்டுத்தாபணத்தின் தலைவர் பதவிக்கு –அந் நிறுவனத்தை இலாபமீட்டி சிறந்த சந்தைப்படுத்தல் பட்டத்தை பெற்று தனியார் நிறுவனங்களில் சிறந்த அனுபவம் உள்ளவர் யாரும் இருந்தால் எனக்கு அடையாளம் கண்டு அறிவியுங்கள்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த நிறுவனங்களில் ஒரு சதமேனும் நிதி இல்லாமல் நஸ்டத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். வீடுகள் நிர்மாணிக்க இந்த அதிகார சபைகளில் நிதி இல்லை. 1500 ஊழியர்களை கட்சி சார்பாக நியமித்து 6 மாத காலத்திறகுப் பிறகு தேர்தல் காலத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேலாக தற்காலிக அடிப்படையிலும் 500 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்க நிதி தேட வேண்டியுள்ளது. 

அவர்கள் அனைவரும் எமது மக்கள் அவர்களை ஒருபோதும் நான் நிறுத்தப்போவதில்லை. எனது ஆதரவாளர்களையும் இந் நிறுவனங்களில் நியமிக்கப்போவதில்லை. ஏதாவது வெற்றிடம் ஏற்படுமிடத்து அதனை பத்திரிகையில் விளம்பரப்படுத்தி பரீட்சை நேர்முகம் முலமாக அந்தந்த பொதுமுகாமையாளர்கள் நியமியுங்கள் என அமைச்சர் வேண்டிக் கொண்டார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியின் உறுப்பிணர்கள், 50 க்கும் மேற்பட்டோருக்கு பணிப்பாளர், இணைப்பாளர்கள் வழங்கி அரச பொறியியற் கூட்டுத்தாபணத்தில் 80 வாகனம் வாடகைக்கு அமைத்துக் கொடுத்துள்ளார். அதே போன்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் 15 வாகனம் வாடகைக்கு பெற்று அரசியல் செய்துள்ளனர். 

ஒரு வாகனத்திற்கு இந் நிறுவனங்கள் மாதாந்தம் 30ஆயிரம் ருபாவை வாடகைப் பணமாக குறிப்பிட்ட கம்பணிக்கு செலுத்தியுள்ளது. 65 வாகனத்திற்கும் எத்தனை பில்லியன் பொது மக்கள் பணம் நாசமாக்கப்பட்டுள்ளதை சற்று சிந்தித்து பாருங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -