கிழக்கின் முதலமைச்சர் பதவியும் ஆட்டம்காணப்போகும் கட்சியின் தளமும்



எம்.வை.அமீர்-

கிழக்கின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ள இவ்வேளையில் அண்மையில் மருதமுனையில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இன்னும் 72 மணிநேரத்தில் முதலமைச்சரை அறிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றவூப்ஹக்கீம் அறிவித்திருந்தார்.

முதலமைச்சரை அறிவிப்பதற்கு வழங்கப்பட்ட 72 மணிநேரம் என்ற காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில மணிநேரமே இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரசின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 7 மாகாணசபை உறுப்பினர்களின் ஆதரவாளர்களும் தங்களது சார்பான உறுப்பினரே முதலமைச்சர் ஆவார் என கூறிவருகின்றனர்.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஆரம்பித்துள்ள இந்த அரசியல் சித்து விளையாட்டு அக்கட்சியின் சில தளங்களை ஆட்டங்காண வைக்கும் என்பதில் மருகருத்துக் கூறமுடியாது.

கல்முனையை எடுத்துக்கொண்டால் முதலமைச்சர் ஆட்டத்தில் அக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் இருக்கிறார். முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என வரணிக்கப்படும் இப்பிரதேசம் அக்கட்சியின் அரம்பகாலமுதல் பெரும் பங்களிப்பு செய்து வரும் பிரதேசம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 89.81வீதம் என்ற இலங்கையிலேயே அதிகூடிய வாக்குகளை வழங்கிய பிரதேசம், அண்மையில் நிறுவப்பட்ட புதிய அமைச்சரவையில் அதிகூடிய வாக்குகளை வழங்கிய இப்பிரதேச மக்கள் அமைச்சர் ஒருவரால் அலங்கரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புறக்கணிக்கப்பட்டது.

 இதனால் மக்கள் தங்களது அதிர்ப்திகளை தெரிவித்துவரும் இந்தவேளையில் 72 மணிநேரத்தில் முதலமைச்சரை அறிவிப்பதாக கூறப்பட்டு குறித்த 72 மணிநேரம் முடிவடைய இன்னும் சிலமணிநேரங்களே இருக்கின்ற இச்சந்தர்ப்பமானது முஸ்லிம் காங்கிரசின் கோட்டைக்குள் ஓட்டைவிழாமல் பார்த்துக்கொள்வது முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு இருக்கவேண்டிய முக்கிய பொறுப்பாகும்.

கடைசி நேர இவ்வேளையில், ஏற்கனவே குறைந்தது பிரதியமைச்சரையாவது வழங்க வில்லையே என்ற அதிர்ப்தியில் இருக்கும் கல்முனை மக்கள், கிழக்கு மாகாணசபையிலாவது சரியான அந்தஸ்த்து வழங்காதவிடத்து, தற்போது கல்முனையில் தடம்பதித்துள்ள அமைச்சர் ரிசாத் அவர்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகைதரவுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா போன்றோரின் எழுச்சிக்கு வித்திட்டதாக அமையும் என்பது திண்ணமே.

யார் முதலமைச்சர் என அறிவிக்காது எல்லோரது மனங்களிலும் ஆசையை தூண்டும் விதத்தில் இவ்வாறான காலக்கெடு விதிக்கும் செயற்பாடானது நிட்சயம் ஏதாவது ஒரு பிரதேசத்தில் சரிவை ஏற்படுத்தப்போவது தவிர்க்கமுடியாத ஒன்றாக அமையும்.

கிழக்குமாகாணசபையின் கடந்த அமைச்சரவை நியமனத்தின் போது சிலரை கோட் சூட்டுடன் வருமாறு கூறிவிட்டு அவர்களுக்கு வழங்காதது போல் இம்முறையும் கோட் சூட் எடுத்துள்ள யார் அதனை அணிவார்கள் என்பதை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கூறிய 72 மணிநேர காலக்கெடு முடிய இன்னும் சிலமணிநேரங்களில் அறிய முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -