இலங்கைக்கான விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ். குடாநாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இரு தரப்பு விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் ஒருவர் 25 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இரு தரப்பு விஜயம் மேற்கொண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
தனது இலங்கை விஜயத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
