எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரதர் தெரிவித்துள்ளார்
எந்தவொரு அரசியல் கட்சியும் அரசாங்கம் அமைக்கும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாது. எனவே பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க முடியும்.
நாட்டின் அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டுமென அதுரலிய ரதன தேரர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
