ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஓரங்கட்ட நினைக்கும் சில்லறை வியாபாரம் அம்பலம்

ம்பாரை மாவட்டத்தில் பல பகுதிகளில் தபாலிலும், மறைமுகமாகவும் துண்டுப்பிரசுரம் அனுப்பப்படுகிறது. எதிர்வரும் 26ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக ”ஹர்த்தால்” அனுஷ்டிக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.

இது முற்று முழுதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவிகளைப் பெற்றுக்கொண்டு அமைச்சுக்காகவும், சுயநலத்துக்காகவும், தேசியத்தலைமை என்ற நப்பாசைப்பெயருக்காகவும் விலகிச்சென்ற சில்லறைகளின் ஆதரவாளர்களால் செய்யப்படும் விசமப்பிரச்சாரம். இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அச்சம்கொள்ளத்தேவையில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் இம்போட்மிரர் இணையத்தள செய்திப்பிரிவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகத் திகழும் அம்பாரை மாவட்டத்துக்கு கட்சியினால் கடந்த காலங்களிலும் இன்றும் பல பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரில் இருந்து பிரதி அமைச்சுப்பதவிகளும், மாகாண அமைச்சுப்பதவிகளும், இராஜாங்க அமைச்சுப்பதவிகளும் வழங்கிவைக்கப்பட்டிருப்பதனை கட்சி ஆதரவாளர்கள் மறுக்க மாட்டார்கள். 
ஆனால் பொய்யான பிரச்சாரங்களை உண்டு பண்ணி மக்களை திசை திருப்பி அதன் மூலம் நீரற்ற வயற்காணிபோல் காய்ந்து கவனிப்பாரற்றுக்கிடக்கும் நப்பாசைப்பதவிகளை மீண்டும் தூசு தட்டிக்கொள்ளலாம் என்று இப்படியான போலி துண்டுப்பிரசுரங்களை வெளியிடுகின்றனர். என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒருபோதும் மனந்தளரமாட்டார்கள் அவர்கள் உறுதியுடன் தங்களது போராட்டங்களை எடுத்துச்செல்வார்கள். தானும் தனது குடும்பமும் உல்லாசமாக இருந்தால் போதும் மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் தனக்குப்பிரச்சனை இல்லை என்று உல்லாசம் அனுபவிப்பவர்கள் பதவிகளுக்காக வீண்பழி சுமத்துவதனை எமது போராளிகள் சும்மா பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அதற்கான பாடத்தினைப் புகட்டுவார்கள் என்பதில் எமக்கு நம்பிக்கையிருக்கிறது.

கடந்த  மாதம் சாய்ந்தமருதில் தலைவருக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினை கட்சிக்கும், தலைமைக்கும் எதிரானவர்கள் செய்தார்கள் என்பதனை கிழக்குமாகாண உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தலைமையிடம் கூறி மன்னிப்புக்கோரியதனையும் மக்கள் அறிந்திருப்பார்கள். எனவே போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் கட்சியின் போராளிகளிடம் கோரிக்கைவிடுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -