மருதமுனை ஜம்'இய்யா அமைப்பின் நான்காவது இரத்ததான முகாம்!

ம் நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் முகமாக இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்'இய்யா) – மருதமுனை அமைப்பானது சுரகிமு ஸ்ரீலங்கா அமைப்பின் ஆதரவுடன மருதமுனையில் இரத்த தான முகாம் ஒன்றினை இன்று (03.02.2015) ஏற்பாடு செய்தது.

தொடர்ச்சியாக நான்காவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வானது இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் பிராந்திய நாசிம் ஆதுஆ. ஜெசான் அவர்களின் தலைமையிலும் அமைப்பின் கிளைப் பொறுப்பாளர் எம்.எம் றுசைத் அவர்களின் வழிகாட்டலிலும் நடைபெற்று முடிந்தது. மேலும்  இரத்ததான முகாமுக்கு பொறுப்பாக அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவர் ஆஆ. முஸ்தாக அஹ்மத்  நியமிக்கப்பட்டிருந்தார். 

மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை இவ் இரத்ததான நிகழ்வு இடபெற்றது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியக் குழுவினரால் மேற்பார்வை செய்யப்பட்டு சிறப்பாக நாடைபெற்றுமுடிந்த இன் நிகழ்வில் மருதமுனையைச் சேர்ந்த 93 பேர் இரத்த தானம் செய்து தமது பங்களிப்பினை வழங்கினர்.

சென்ற வருடங்களில் மருதமுனை ஜம்'இய்யா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரத்த தான நிகழ்வுகளில் மொத்தமாக 271 (2012 - 84, 2013 - 76, 2014 - 11) பேர் இரத்த தானம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -