சம்மாந்துறை ஜலீல்-
மஹிந்த ஆட்சியில் சட்ட பூர்வமற்ற பொலீஸ் அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு முஸ்லிம்களின் பள்ளிவாயல்களிலும், முஸ்லிம்களின் உடைகளிலும் கை வைத்து தலை தெரிக்க ஆடிய பொது பல சேனா அமைப்பு மஹிந்த அரசினால் முஸ்லிம்களினைத் தாக்குவதற்க்காகவே உறுவாக்கப்பட்ட அமைப்பு. அதன் கொட்டம் மைத்திரி-ரணில் ஆட்சியில் அடக்கப்படும்.
என சம்மாந்துறை சென்நெல் கிராமத்தில் விவசாயப் பொது மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட -நீர்ப்பாசன விவசாயப் பிரதி அமைச்சர் அனோமா கமகே அவர்களுக்கான வரவேற்புக் கூட்டத்தினை தலைமை தாங்கி உரை நிகழ்த்திய சம்மாந்துறைத் தொகுதி ஐ.தே.க. பிரதம அமைப்பாளர் ஏ.ஹசனலி தெரிவித்தார்.
தொடர்ந்தும் தலைமை உரையின் போது :
மஹிந்த ஆட்சியின் போது அரசியல் பழிவாங்கல்கள் இவ்வரசாங்க அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 30,000 பேருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும்.
மேலும் மைத்திரி - ரணில் ஆட்சியில் முஸ்லிம்களின் மார்க்க சட்டத்தில் கைவைக்கப்படாது.
சிறுபான்மையினர் இந் நாட்டில் சுதந்திரமாக வாழ மக்கள் ஒத்துமொத்தமாக அளித்த வாக்குகள் உதவியளிக்கின்றன.
நாட்டில் ஜனநாயகம் மீண்டும் உயிர்ப்பித்துள்ளது; சட்டம் ஆட்சி செய்கிறது. முஸ்லிம்கள் சுதந்திரமாகவும், ஏனைய இனங்களுடன் ஐக்கியமாகவும் வாழ இவ்வரசு வழிசமைத்துள்ளது.
இனவாத, மதவாத செயற்பாடுகளுக்கு இவ்வரசில் இனியும் இடமளிக்கப்படாது ; பல்லின மக்களையும் பல மொழி பேசுகின்ற மக்களாகக் கொண்ட சுதந்திர நாடாக திகழ்கின்றது. என்றும் கூறினார்.
வரவேற்பு நிகழ்வில் பெருமளவிலான விவசாய பொது மக்களும், அரச அதிகாரிகளும், பள்ளிவாயல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


.jpg)